• Apr 30 2024

எங்க அம்மா ஒரு வார்த்தை சொன்னாங்க அதனால தான் பொன்னியின் செல்வன் படம் ஹிட்டாகிச்சு- கார்த்தி சொன்ன சுவாரசியமான தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!


மணிரத்னம் இயக்கத்தில் சீயான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் 2 படம் ஏப்ரல் 28ம் தேதி தியேட்டர்களில் பிரமாண்டமாக ரிலீஸாகவிருக்கிறது.கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் பல்வேறு நகரங்களுக்கு சென்று படத்தை விளம்பரம் செய்து வருகிறார்கள். 


இந்நிலையில் கோவையில் நடந்த விளம்பர நிகழ்ச்சியில் கார்த்தி பேசியது பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.எந்த ஊருக்கு சென்றாலும் அரங்கில் இருக்கும் பெண்களை பார்த்து உயிர் உங்களுடையது தேவி என்று கூறி அசத்திவிடுகிறார். அது குறித்து கார்த்தியின் மனைவி என்ன சொன்னார் என கேட்கப்பட்டது. அதற்கு கார்த்தி கூறியதாவது, ரொமான்ஸ் இல்லாமல் நீங்க கதையே நடிக்க மாட்டீங்களானு கேட்டுக்கிட்டே இருப்பாங்க. ஈரோட்டுகாரங்கள்லாம் இப்படி இருந்தா என்ன பண்றது. ரொமான்ஸ் இல்லை என்றால் வாழ்க்கை போர் அடிக்காதா என்று சொல்லிப் பார்க்கிறேன். நிஜத்தில் மட்டும் தான் ரொமான்ஸ் வர மாட்டேங்குதுனு கிண்டல் பண்ணுவாங்க என்றார்.


பொன்னியின் செல்வன் படத்தை பார்த்துவிட்டு, வந்தியத்தேவன் எல்லோரை பார்த்தும் ஜொள்ளு விடுறான். ஆனால் ரொம்ப கண்ணியமா இருக்கான்னு மனைவி ஒரு வார்த்தை சொன்னாங்க. அது ரொம்ப பெரிய வார்த்தையாக இருந்துச்சு. எங்க அம்மாகிட்ட ஒரு படம் பார்த்துவிட்டு ரிசல்ட் வாங்குவது ரொம்ப கஷ்டம். எங்கப்பா சிந்து பைரவி நடிச்சப்பவே ம்ம் என்றாங்க. எங்க அண்ணன் நந்தாவில் நடிச்சப்ப ம்ம் அப்படினாங்க. இந்த படம் பார்த்துவிட்டு முதல் முறையாக எங்கம்மா வந்து யப்பா படம் சூப்பர்பா என்று சொன்னாங்க. 


அதனால் தான் இவ்வளவு பெரிய ஹிட்டு என்றார் கார்த்தி.உயிர் உங்களுடையது தேவி என கார்த்தி எங்கு சொன்னாலும் ரசிகைகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்கிறார்கள். அந்த அளவுக்கு அந்த வசனம் பிரபலமாகிவிட்டது. இளசுகளும் தங்களுக்கு பிடித்தவர்களை பார்த்து உயிர் உங்களுடையது தேவி என்று கூறி வருகிறார்கள். இரண்டாம் பாகத்தில் குந்தவையை பார்த்து வந்தியத்தேவன் என்ன சொல்லவிருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement