• May 04 2024

இன்னும் 100 கோடி வசூலிக்கவுள்ள பொன்னியின் செல்வன்... காரணம் இதுதானாம்... கொளுத்திப் போட்ட பார்த்திபன்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் ஆனது வெளியாகி மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருவதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரிக்குவித்து சாதனை படைத்து வருகிறது. 


அந்தவகையில் இப்படம் வெளியான 12 நாட்களில் ரூ.416 கோடி வசூலித்துள்ளது. இப்படம் 400 கோடி வசூலைக்கடந்ததை படக்குழுவும் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாது விரைவில் இப்படமானது கமலின் விக்ரம் பட சாதனையையும் முறியடிக்க உள்ளது. 


அதாவது கமல் நடித்த 'விக்ரம் திரைப்படமானது ரூ.426 கோடி வசூலித்து, இந்த ஆண்டு வெளியான படங்களிலேயே அதிக வசூல் ஈட்டிய படம் என்ற சாதனையை பெற்றிருக்கின்றது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்னும் ஒரு சில தினங்களில் இந்த சாதனையை முறியடித்துவிடும் எனக் கூறப்படுகின்றது.


இதற்கான ஒரு காரணம் என்னவெனில் சமீபத்தில் ராஜராஜ சோழன் இந்து மதத்தை சேர்ந்தவர் என சித்தரிக்கப்படுவதாக இயக்குநர் வெற்றிமாறன் கூறியது பேசுபொருள் ஆனமை ஆகும். இதையடுத்து இப்படம் தொடர்பாக பெரும் சர்ச்சை எழுந்தது. எனினும் பாஜகவினர் வெற்றிமாறனின் இந்தப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். 

ஆனால் நடிகர் கமல் ஹாசனோ "அவர் சொன்னது சரிதான்" எனக் கூறியுள்ளார். அதாவது "அந்த காலத்தில் இந்து மதம் என்ற ஒன்றே கிடையாது. அதை அவர் சரியாக தான் சொல்லி உள்ளார்" என வெற்றிமாறனுக்கு ஆதரவாக பேசி இருந்தார்.


இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் சின்ன பழுவேட்டரையராக நடித்திருந்த நடிகர் பார்த்திபன், இந்து மத சர்ச்சையால் பொன்னியின் செல்வன் படமானது மேலும் ரூ.100 கோடி வசூலிக்கும் என ட்விட்டரில் சூசகமாக தெரிவித்துள்ளார். 

இப்பதிவில் அவர் குறிப்பிடுகையில் "Crosses-400 Crores! இந்து என்ற மதம் இன்று இந்து என்ற பிரச்சனையாக மதம்மாறி விட்டது! இந்த எழுத்தும் ஏதோ ஒரு பிரச்சனையை எழு(இ)ப்ப லாம்! எழுப்பினால் … இன்னும் ஒரு 100!" என பதிவிட்டுள்ளார். 


எனவே அவர் சொல்லியபடி நடந்தால் பொன்னியின் செல்வன் ரூ.500 கோடியை கடக்கும்போல தான் தெரிகிறது. எது எவ்வாறாயினும் இப்படமானது எவ்வளவு வசூலிக்கின்றது என்பதனை சற்றுப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement

Advertisement