• May 18 2024

மாஸாக விமானம் ஓட்டும் நடிகர் வினய்- தீயாய் பரவும் புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

“உன்னாலே உன்னாலே” என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் வினய். அப்படத்தின் மாஸ் வெற்றி பெற்றதை அடுத்து அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கொடுத்தது. ஒருகட்டத்தில் நாயகன் என்பதை தாண்டி வில்லனாகவும் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

விஷால் நாயகனாக நடித்த துப்பறிவாளன் படத்தில் வினய் நடித்த வில்லன் கதாபாத்திரத்தை யாராலும் மறக்க முடியாது என்று தான் கூற வேண்டும்.

This image has an empty alt attribute; its file name is c8b92a75-vinai7-1600494563-1.jpg

கடைசியாக சிவகார்த்திகேயன் நடித்திருந்த டாக்டர் படத்தில் வினய் வில்லனாகவே நடித்தார், அதேபோல் எதற்கும் துணிந்தவன் படத்தில் செம வெயிட்டான வேடத்தில் நடித்திருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

மேலும் வினய் ஒரு பேட்டியில் தான் முதலில் விஸ்கி கம்பெனியில் பணிபுரிந்ததாகவும் பின்னர் பேங்க் வேலை செய்யும் போது சினிமா பக்கம் ஆர்வம் வந்து இந்த பக்கம் வந்ததாக தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் நடிகர் வினய் குட்டி விமானம் ஒன்று ஓட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. தற்போது அவர் ஓட்டும் போது எடுத்த புகைப்படங்களை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து அவருக்கு சூப்பர் வாழ்த்துக்கள் என கூறி வருகின்றனர்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement