• May 18 2024

சிவகார்த்திகேயன் செயலால் கவலையுற்ற மனோபாலா- என்ன கூறியுள்ளார் தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கிக்கொண்டிருக்கின்றார். டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்த சிவார்த்திகேயன் மெரினா படத்தின் மூலம் இயக்குனர் பாண்டிராஜால் அறிமுகமானார்.

மேலும் அதைத்தொடர்ந்து எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரெமோ என தொடர் வெற்றிகளின் மூலம் முன்னணி நடிகராக உயர்ந்தார். இந்நிலையில் கடந்தாண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் நூறு கோடி வசூல் செய்து பெரிய சாதனை படைத்தது.

இப்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் மே 13ம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் டான். மேலும் இதில் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் நடித்துள்ளார்கள், யார் யார் என்று போஸ்டர்களை பார்த்தே நாம் தெரிந்துகொண்டோம்.

மே 13ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இன்று மாலை 7 மணியளவில் படத்தின் டிரைலர் வெளியாக இருக்கிறது. மேலும் இந்த தகவலை சிவகார்த்திகேயன் படக்குழுவை டாக் செய்து டுவிட் செய்துள்ளார்.

ஆனால் அதில் படத்தில் நடித்துள்ள மனோபாலாவின் பெயரை டாக் செய்ய சிவகார்த்திகேயன் மிஸ் செய்துள்ளார். அவரின் அந்த பதிவை ஷேர் செய்து மனோபாலா எனது பெயர் எங்க பா? என கேட்டுள்ளார்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement