• Jan 19 2025

சென்னை விமான நிலையத்தில் நடிகர் கருணாஸால் ஏற்பட்ட பரபரப்பு! ஓங்கி ஒலித்த அலாரம்

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

சென்னையில் இருந்து திருச்சி செல்லும் இண்டிகோ விமானத்தில் நடிகர் கருணாஸ் பயணிக்க இருந்துள்ளார். இதன் போது விமான நிலையத்தில் கருணாஸ் வச்சிருந்த பையை சோதனை செய்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

நடிகர் கருணாஸ் வைத்திருந்த பையை ஸ்கேன் செய்தபோது எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் சற்று நிமிடம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த பையை சோதனையிட்டபோது அதில் 40 துப்பாக்கி குண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து கருணாஸ் பையில் இருந்து 40 துப்பாக்கிக் குண்டுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், நடிகர் கருணாஸ் இடம் விசாரணை நடாத்தி வருகின்றார்கள்.


இதன் போது துப்பாக்கி உரிமம் தன்னிடம் உள்ளது என குறித்த ஆவணங்களை அதிகாரிகளிடம் கருணாஸ் காட்டியுள்ளார். மேலும் அவசரமாக வந்ததால் பையில் இருந்த துப்பாக்கி குண்டுகளை கவனிக்கவில்லை என அதிகாரிகளிடம் கருணாஸ் கூறியுள்ளார்.

எனினும் கருணாசின் பயணத்தை பாதுகாப்பு அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர். தற்போது குறித்த தகவல் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement