• May 04 2024

அட நம்ம சதீஷின் மகள் இந்தளவிற்கு வளர்ந்து விட்டாரா..? தனக்கு கொடுத்த விருதை அவருக்கே கொடுத்திருக்காரே நம்ம ஹீரோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சதீஷ். ஒரு காலத்தில் வடிவேலு, செந்தில், கவுண்டமணி ஆகியோருக்கு எவ்வளவு ரசிகர் கூட்டம் இருந்தார்களோ அதே போன்று தற்போது சதீஷின் நகைச்சுவைக்கும் பல ரசிகர்கள் அடிமையாக உள்ளனர்.

அந்தளவிற்கு இவரின் நகைச்சுவைகள் மக்கள் மத்தியில் பிரபலமானவை. இவர் 'மெரினா, தமிழ் படம், மதராச பட்டணம், வாகை சூடவா, தாண்டவம், எதிர்நீச்சல், கத்தி, மான்கராத்தே, ரெமோ, வேலைக்காரன், மிஸ்டர் லோக்கல், கலகலப்பு-2, சிக்ஸர்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவ்வாறாக பல படங்களிலும் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வந்த சதீஷ், சிந்து என்பவரை 2019-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு 2020-ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது.

இதனைத் தொடர்ந்து நடிகர் சதீஷ் கூறுகையில் அவரது மகள் நிஹாரிகா தன்னுடைய வாழ்க்கையில் நுழைந்த பிறகு தன் வாழ்க்கை தலைகீழாக மாறியது என முன்னர் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

அப்பேட்டியில் மேலும் அவர் கூறுகையில், "என் மகள் பிறக்கும் வரை, நான் வாழ்க்கையை என் வழியில் நடத்தினேன். ஆனால் இப்போது, ​​அவள் தான் ரிமோட் கண்ட்ரோலை வைத்திக்கிறாள். அவள் எழுந்ததும் நாம் எழுந்திருக்க வேண்டும். அவள் தூங்க சென்றபோது படுக்கைக்குச் செல்ல வேண்டும். அவள் விரும்பும் போதெல்லாம் அவளுடன் விளையாட வேண்டும்" என தனது செல்ல மகள் பற்றி தெரிவித்திருந்தார்.

இவ்வாறாக குடும்ப வாழ்க்கையில் சந்தோசமாக இணைந்திருந்த சதீஷ் தற்போது ஹீரோவாக நாய் சேகர் என்ற படம் நடித்திருந்தார். இப்படம் ஆனது இந்த வருடம் ஜனவரி மாதம் தான் வெளியாகி இருந்தது. அப்படத்திலும் அவர் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தமையால் இப்படத்திற்காக சதீஷிற்கு விருது கிடைத்துள்ளது.

அந்த விருதை வீட்டில் தனது செல்ல மகளிடம் கொடுத்து போட்டோ எடுத்திருக்கின்றார். அதுமட்டுமன்றி அப்போட்டோவை தனது இன்ஸ்டாவிலும் பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement