• Aug 11 2026

கத்தி கதறினாரு.. இப்போ கெனிஷாவ நம்பி நடுத்தெருவுல நிக்கிறாரு.! மொத்தமா உடைத்த பிரபலம்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி இடையேயான குடும்ப பிரச்சினை, நீதிமன்ற விசாரணை மற்றும் சமீபத்தில் அவர் அளித்த பத்திரிகையாளர் சந்திப்பு ஆகியவை தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வருகின்றன. 

இந்த நிலையில், ஒரு பிரபல விமர்சகர் தனது யூடியூப் சேனலில் ரவி மோகனின் சமீபத்திய நடவடிக்கைகள் குறித்து கடுமையாக கருத்து தெரிவித்துள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில், ரவி மோகன் மீடியாவை சந்திக்க வேண்டிய அவசியமே இல்லை. சந்தித்தாலும் இவ்வளவு ஆக்ரோஷமா, கத்தி கதறி பேச வேண்டியதில்லை. அவர் அப்படி பேசியபோது, எல்லாருமே அவர் சொல்வது உண்மைன்னு நம்பிட்டோம். ஆனால் அதுக்கப்புறம் அவர் சொன்ன பல விஷயங்கள் தானாகவே பொய்னு வெளியே வர ஆரம்பிச்சிருச்சு.

ஒரு நாள் வந்து ஆவேசமா பேட்டி கொடுக்கிறார், அடுத்த நாள் மன்னிப்பு கேட்கிறார். இதைப் பார்த்தா அவர் கொஞ்சம் அன்ஸ்டபிளா இருக்கிறாரோன்னு தோணுது. நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகிட்டிருக்கும்போது இப்படி பேசியிருக்கக் கூடாது. கண்டிப்பா சரியான சட்ட ஆலோசனை இல்லாமதான் அந்த பேச்சு நடந்திருக்கணும்.


அதேபோல், ரவி மோகனின் அண்மைய செயல்பாடுகள் ஒன்றுக்கொன்று முரணாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

ஒரு பக்கம் என்கிட்ட ஜீவனாம்சம் கொடுக்க பணம் இல்லைன்னு சொல்லலாம். இன்னொரு பக்கம் இனிமேல் நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டு புதிய படங்களில் ஒப்பந்தம் போடுறது எல்லாம் மக்களுக்கும் தெரியும், நீதிமன்றத்துக்கும் தெரியாதா? 


குடும்ப பிரச்சினைக்கு தீர்வு குறித்து பேசிய அவர்,  எல்லா ஈகோவையும் தூக்கி குப்பையில போடணும். மனைவியோட பேச பிடிக்கலையா, பிள்ளைகள் மூலமா பேசுங்க. குடும்பத்தை காப்பாத்த முயற்சி பண்ணுங்க. இந்த யுத்தம் எதுக்கு? காலம் எல்லாத்தையும் மாற்றும். கொஞ்சம் அமைதியா உட்கார்ந்து நல்ல முடிவு எடுக்கணும் என்று தனது கருத்தை தெரிவித்தார்.

மேலும், மெல்ல மெல்ல ரவி மோகன் மேல இருந்த நல்ல மனிதர் என்ற பெயர் குறைய ஆரம்பிச்சிருக்கு. இனிமேல் அவர் எது சொன்னாலும் மக்கள் நம்ப மாட்டாங்கன்னு கூட சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் வர ஆரம்பிச்சிருக்கு என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வரும் நிலையில், ரவி மோகன் - ஆர்த்தி விவகாரம் மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது.


Advertisement

Advertisement