தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழ்பவர் தான் நடிகர் சிம்பு.இவர் குழந்தை நட்ச்சத்திரமாக அறிமுகமாகி இருந்தாலும் தனக்கென ஒரு ரசிகரை் பட்டாளத்தை கொண்டவர்.
இவர் நடிப்பில் சமீபகாலமாக வெளியாகும் திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளதால் இவருடைய படங்களுக்கான எதிர்பார்ப்பானது ரசிகர்களிடையே அதிகரித்துக் காணப்படுகின்றது.
இந்த நிலையில் இவர் தனது தந்தையும் இயக்குநருமான டி. ராஜேந்திரனின் உடல் நிலை சரியில்லாததால் அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கே தன்னுடைய தந்தை குணமடைந்து வருவதாகவும் குடும்பத்துடன் இணைந்து எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார்.அது ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.
இந்த நிலையில், நடிகர் சிம்புவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது.
சமீப காலமாகவே துபாய் அரசு இந்திய நடிகர் நடிகைகளை தேர்வு செய்து , தங்கள் நாட்டின் உயரிய விசாவான கோல்டன் விசாவை வழங்கி வருகிறது. சமீபத்தில் விஜய் சேதுபதி , பார்த்திபன் , த்ரிஷா , மம்முட்டி , மோகன் லால், துல்கர் சல்மான், மீனா, கமல்ஹாசன் உள்ளிட்டவர்களுக்கு கோல்டன் விசா வழங்கியது. கடந்த வாரம் கமலுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்ட நிலையில் தற்போது சிம்புவிற்கும் வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் துபாய் அரசு தங்கள் நாடுகளின் சுற்றுலா மேம்பாட்டை பெருக்க திட்டமிட்டுள்ளது. எனினும் இதன் மூலம் கலை மற்றும் பொழுது போக்கினை மேம்படுத்தும் வகையில் துபாயில் இந்திய நட்சத்திரங்களின் பங்களிப்பை வேண்டுகிறது அந்நாட்டு அரசு . கலை சேவைகளை நடிகர்கள் வழங்குவது, துபாய் சுற்றுலா தளங்கள் குறித்தான பதிவுகளை ஷேர் செய்வதன் மூலம் தங்கள் நாட்டின் புகழ் சாமானியர்களை சென்றடையும் என துபாய் அரசு நம்புகிறது.
கோல்டன் விசா ஐக்கிய அரபு அமீரகம் என அழைக்கப்படும் துபாய் அரசால் முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர், தொழில் வல்லுநர்கள், கலை, அறிவியல், விளையாட்டுத் துறையில் உள்ள குறிப்பிட்ட சிலருக்கு வழங்கப்படுகிறது. மேலும் இந்த துறையில் திறமையானவர்கள் யாராக இருந்தாலும் கோல்டன் விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். கோல்டன் விசா ஐந்து அல்லது 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் மற்றும் தானாகவே புதுப்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
பிற செய்திகள்
- உடலில் துணியே இல்லாமல் விஜய் தேவரகொண்டா…வைரலாகும் போஸ்டர்..!
- 44 வயதில் கம்பேக்கா-ரசிகரின் கேள்விக்கு நச் என பதிலளித்த நடிகை பூஜா
- நடிகை கீர்த்தி சுரேஷிற்கு விரைவில் திருமணமா? பெற்றோர் அளித்த பதில்
- ஹிப் ஹாப் ஆதியின் மனைவியை பார்த்துள்ளீர்களா…? இதோ புகைப்படம்…!
- திருமணத்திற்கு பிறகு ஷாருக்கானுடன் ‘அந்த’ காட்சியில் நடிக்கும் நயன்தாரா…வைரலாகும் தகவல்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!