• Jul 12 2025

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. சன் டிவியில் புத்தம் புது சீரியல்.. யார் ஹீரோயின் தெரியுமா?

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவி மற்றும் விஜய் டிவி போட்டி போட்டுக்கொண்டு புதுப்புது சீரியல்களை ஆரம்பித்து கொண்டிருக்கும் நிலையில் சன் டிவியில் ஒரு புதிய சீரியல் ஆரம்பிக்க இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய சீரியலின் முன்னோட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

சன் டிவியில் ஏற்கனவே நான்கு புதிய சீரியல்கள் தயாராகி கொண்டு இருப்பதாகவும் அதன் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் தற்போது ’மணமகளே வா’ என்ற சீரியல் விரைவில் சன் டிவியில் ஆரம்பிக்கப்பட இருப்பதாக முன்னோட்ட வீடியோ வெளியாகி உள்ளது.

ஏற்கனவே சில சீரியல்கள் வெளியாக இருப்பதாக தகவல் வெளியான நிலையில் இந்த சீரியல் லிஸ்டிலேயே இல்லாத ஆச்சரியம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த சீரியலில் ஹரிகா என்பவர் நாயகியாக நடிக்க உள்ளார். இவர் ஏற்கனவே ’திருமகள்’ உள்ளிட்ட சில சீரியலில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சீரியலில் பாஸ்கரன், ஸ்வேதா, ரவிசங்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.



இந்த சீரியலின் முன்னோட்ட வீடியோவில் நாயகி தன்னுடைய வீட்டில் சந்தோஷமாக இருக்கும் காட்சிகள், தனக்கு தனது வீடு சொர்க்கம் என்றும் தங்கள் அம்மா, அப்பா, அண்ணன் ஆகியவர்கள் தான் தனது உலகம் என்றும் அவர் கூறுவதாக உள்ளது. ஆனால் அதே நேரத்தில் தனது அப்பாவின் மனதில் ஒரு பெரிய குறை இருப்பதாகவும் அது என்ன என்பதை கண்டுபிடித்து அதை தீர்வு செய்ய வேண்டியது தனது கடமை என்றும் நாயகி கூறும் காட்சிகளோடு இந்த முன்னோட்ட வீடியோ முடிவுக்கு வந்துள்ளது.

இந்த புத்தம் புது சீரியல் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இந்த சீரியல் ஒளிபரப்பாகும் தேதி மற்றும் நேரம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement