• Jan 21 2025

மூன்றாம் நாளில் மொத்தமா சரிந்த கலெக்சன்... 600 கோடி மட்டும் இழுக்குமா?

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

உலக அளவில் பிரபாஸ் நடித்த கல்கி 28 98 ஏடி திரைப்படம் பற்றிய பேச்சுகள் தான் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. இதில் பிரபாஸுடன் நடிகர் கமலஹாசன், அமிர்தாப், தீபிகா படுகோன் உட்பட துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா, மிருனாள் தாகூர் ஆகியோர் கேமியா ரோலில் நடித்திருந்தார்கள்.

இந்த படத்தின் முதலாம் பாகம் சற்று சலிப்படைய வைத்ததாகவும் இரண்டாம் பாகம் மிரள வைத்ததாகவும் விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

அதேபோல கல்கி படத்தின் வசூலும் வெள்ளிக்கிழமை சற்று டல் அடித்த நிலையில், பிரபல நடிகர்களான ரஜினி, அல்லு அர்ஜுன், யாஷ், சிரஞ்சீவி என வரிசையாக இந்த படத்தை பாராட்டி வந்தார்கள்.

இதைத் தொடர்ந்து இரண்டாவது நாள் பாக்ஸ் ஆபீஸ் கலக்ஷனாக 298.5 கோடிகளை கல்கி திரைப்படம் வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமான தகவல் வெளியானது.


இந்த நிலையில் கல்கி 2898 ஏடி திரைப்படம் வெளியாகி  மூன்றாவது நாளில் மட்டும் 60. 76 கோடி ரூபாய் வசூல் ஈட்டி  இருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் கணிப்புகள் வெளியாகி உள்ளன. 

அத்துடன் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை இன்று கல்கி படத்திற்கு நல்ல புக்கிங் இருப்பதாக கூறுகின்றனர். எனினும் திங்கட்கிழமை முதல் டிக்கெட் புக்கிங் டல் அடித்து காணப்படுகின்றது. 

இதனால் அதிகபட்சம் 600 முதல் 700 கோடி வரை தான் இந்த படம் வசூலிக்கும் எனவும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றமை  குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement