• Sep 17 2024

தந்தையின் பாடலை காப்பி அடித்த மகன்; வைரலாகும் வீடியோ

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தலைநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சுந்தர்.சி. இவர் நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் சினிமாவை கலக்கி வருகிறார். அந்த வகையில் ஆரம்பத்தில் முறைமாமன் என்ற நகைச்சுவை திரைப்படம் வாயிலாக இயக்குநராக என்றி கொடுத்தார்.

காமெடி படங்கள் இயக்குவதில் கில்லாடி இயக்குனரான சுந்தர்.சி கடந்த ஆண்டுகளாக பேய் படங்கள் மீது கவனத்தைச் செலுத்தி தோல்வி அடைந்துள்ளார்.இதனால் பேய் கதைகள் விட்டு மீண்டும் காமெடி பாங்கினை கையில் எடுத்துள்ளார்.

அந்தவகையில், சுந்தர்.சி ஜெய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். ஜெய் மற்றும் ஜீவா ஏற்கனவே சுந்தர் சி இயக்கத்தில் கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகத்தை நடித்திருந்தனர் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை குஷ்புவின் அவ்னி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.அம்ரிதா, ரைசா வில்சன், ஐஸ்வரியா தத்தா, மாளவிகா ஷர்மா, திவ்யதர்ஷினி என பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் அவரது இசையில் உருவாகியுள்ள "ரம்பம் பம்" என்கின்ற பாடல் நேற்று வெளியிடப்பட்டது. இது கமல்ஹாசன் நடிப்பில் "மைக்கேல் மதன காமராஜன்" படத்துக்காக இளையராஜா இசையமைத்த ரம்பம்பம் ஆரம்பம் பாடலில் ரீமேக்காகும்..

யுவன் இதற்கு முன் டிக்கிலோனா படத்துக்குப் 'பேர் வைச்சாலும் " என்கின்ற எவர்கிரீன் ஹிட் பாடலை ரீமிக்ஸ் செய்திருந்தார். இந்தப் பாடல் பட்டிதொட்டியெங்கும் வைரல் ஆன நிலையில் தற்போது அதே பாணியை காஃபி வித் காதல் படத்துக்கு பின்பற்றியுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement