• May 10 2024

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தில் வடிவேலு பாடிய பாடல் குறித்து வெளியாகிய புதிய அப்டேட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் காமெடி கிங்காக வலம் வருபவர் நடிகர் வடிவேலு. குழந்தைகள் முதல் பெரியவர் வரை இவருக்கு எராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். சில காலம் இவர் நடிப்பிலிருந்து விலகியிருந்தாலும் இவரை மிஸ் செய்யாத ரசிகர்கள் இல்லை எனலாம்.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது ரி என்ட்ரி கொடுத்த வடிவேலு சுராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்னும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகின்றார்.இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த ஜூன் மாதத்திலேயே நிறைவடைந்தது. இதையடுத்து படக்குழுவினர் புகைப்படங்களையும் வெளியிட்டனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துவரும் இந்தப் படத்தில் அவரது இசையில் வடிவேலு இரண்டு பாடல்களை பாடியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் பாடல்களின் ஒன்றிற்கு பிரபல நடிகரும் நடன இயக்குநருமான பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார்.

இவர்கள் இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி வைரலான நிலையில், தற்போது படத்தின் அப்டேட்டையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தில் வடிவேலு பாடிய பாடல் விரைவில் ரிலீசாக உள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாத இறுதியில் இந்தப் பாடல் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. மேலும் இது தவிர வடிவேலு உதயநிதியின் மாமன்னன் படத்திலும் ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2 உள்ளிட்ட படத்திலும் கமிட்டாகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்க்கது..

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement