• May 02 2024

மகேஷ்பாபுவின் 28 வது படம் குறித்து வெளியாகிய புதிய அப்டேட்- அதிரடி கூட்டணியாக இருக்கே

stella / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவரது நடிப்பில் இறுதியாக சர்க்காருவாரி பட்டா திரைப்படம் வெளியாகியது. இயக்கத்தில் வெளியான இந்தப் படம் அவரது ரசிகர்களை கவர்ந்த நிலையில், படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் வசூலில் அள்ளிக் குவித்தது.

இந்நிலையில் தற்போது அடுத்ததாக மகேஷ்பாபு நடிக்கவுள்ள அவரது எஸ்எஸ்எம்பி 28 படத்தின் அறிவுப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படம் குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டிலேயே வெளியான நிலையில், படம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் இந்தப் படம் ட்ராப் ஆனதாக கருதப்பட்டது.

படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டிலேயே திட்டமிடப்பட்டு, இந்த ஆண்டு சம்மர் வெளியீட்டிற்கும் திட்டமிடப்பட்டது. ஆனால் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளான இந்தப் படத்தின் சூட்டிங் தள்ளிப் போனது. இந்நிலையில் தற்போது படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து படக்குழு வீடியோவையும் வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இசையமைப்பாளர் தமன் வெளியிட்டுள்ளார். சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவுடன் முதல் முறையாக இணைவது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்த வீடியோவில் படத்தின் சூட்டிங் அடுத்த மாதத்தில் துவங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை த்ரிவிக்ரம் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. மிரட்டலான இந்த வீடியோவில் மீண்டும் இணையும் அதிரடி கூட்டணி என்று கூறப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு சம்மரில் படம் ரிலீசாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் மகேஷ் பாபுவிற்கு யார் ஜோடியாவார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement