• May 17 2024

சூரியின் இடத்தைப் பிடித்த வேறொரு காமெடியன்… இப்படி ரூட் மாறீட்டீங்களே!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்து பின்னர் 'வெண்ணிலா கபடி குழு' படத்தில் இடம்பெற்ற காமெடி மூலம் உலகமெங்கும் பரோட்டா சூரி என்ற பெயரோடு அறிமுகமானவர் நடிகர் சூரி.

இதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர் தற்போது 'விடுதலை' என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்புக்கள் யாவும் தற்போது முடியும் தருவாயில் உள்ளன. இந்தப் படத்தை முடித்துவிட்டு கையோடு மற்ற திரைப்படங்களில் நடிப்பதற்கும் தயாராகி வருகிறார். எனினும் அவருக்கு முன்பு போன்றில்லாமல் தற்போது பட வாய்ப்புகள் குறைவாகத்தான் வருகின்றன.

ஏனெனில் இதற்கு காரணம் தற்போது அவருடைய இடத்தை பிரபல நடிகர் யோகி பாபு பிடித்து விட்டதாகக் கூறப்படுகின்றது. சமீபத்தில் சூரியின் நடிப்பில் 'எதற்கும் துணிந்தவன், டான்' போன்ற திரைப்படங்கள் வெளிவந்திருந்தன. இதனைத் தொடர்ந்து தற்போது இவரின் கைவசம் 'விடுதலை, விருமன்' ஆகிய படங்கள் மட்டுமே இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

ஆனால் இவரோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது யோகி பாபுவின் கைவசம் தற்போது 30 இற்கும் மேற்பட்ட படங்கள் இருக்கின்றன. தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்கள் அனைவரின் படத்திலும் தற்போது யோகி பாபு தான் கமிட்டாகி நடித்துக் கொண்டிருக்கிறார். இதன் காரணமாக சூரியின் நிலைமை தற்போது பரிதாபத்திற்கு உள்ளாகியுள்ளதாக பலரும் கூறி வருகின்றனர்.

யோகி பாபுவிற்கு முன்னதாக சூரி தான் தமிழ் சினிமாவில் வடிவேலு, சந்தானம் இல்லாத குறையை போக்கி வந்தார். நகைச்சுவை நடிகர்களாக அவர்கள் இருவரும் ஹீரோ அவதாரம் எடுத்த பிறகு சூரி அவர்களுடைய இடத்தை வெகு சுலபமாக பிடித்து விட்டார்.

இதேபோன்ற ஒருநிலை தான் தற்போது இவர் விஷயத்திலும் நடந்து இருக்கிறது. அதாவது சூரி தற்போது தனது சொந்தத் தொழிலில் அதிகளவு கவனத்தை செலுத்தி வருகின்றார். சூரிக்கு மதுரையில் அம்மன் என்ற பெயரில் ஹோட்டல் ஒன்று உள்ளது. இங்கு இவர் அனைவருக்கும் பிடிக்கக் கூடிய வகையில் தரமான உணவுகளைக் கொடுத்து வருவதால் இக்ஹோட்டலிற்கு வாடிக்கையாளர்களும் அதிகமாக வருகின்றனர்.

இதன் காரணமாக இதற்கு கீழே நிறைய கிளைகளையும் ஆரம்பித்து இருக்கின்றார் சூரி. அதிகளவு வருமானத்தை இதன் மூலம் ஈட்டக் கூடியதாக இருப்பதனால் சூரி தற்போது சினிமாவை விட இதிலேயே அதிகளவு கவனத்தை செலுத்தி வருகின்றார். இந்தநிலையில் படங்களில் நடிகர் சூரியின் இடத்தை தற்போது யோகி பாபு பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement