• Nov 07 2025

கம்ருதீன்- பார்வதிக்கு இடையே காதலா.? திடுக்கிடும் உண்மையை வெளியிட்ட கலையரசன்.!

subiththira / 11 hours ago

Advertisement

Listen News!

தென்னிந்திய ரியாலிட்டி ஷோக்களில் அதிகமான பார்வையாளர்களைக் கொண்டுள்ள நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்நிலையில் சீசன் 9 கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. இதில் பல போட்டியாளர்கள் தங்கள் தனித்துவமான செயற்பாட்டால் ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர்.


சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர் கலையரசன் நேர்காணல் ஒன்றில் அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளார். இந்த நேர்காணலில் கலையரசன், பிக்பாஸ் வீட்டிற்குள் நடந்த சில முக்கிய சம்பவங்களை பகிர்ந்து, பார்வதி மற்றும் கம்ருதீன் குறித்த உண்மைகளைக் கூறியுள்ளார்.

கலையரசன்," பார்வதி பிக்பாஸ் வீட்டிற்குள் நான் கம்ருதீனை லவ் பண்ணுற மாதிரி யூஸ் பண்ணிட்டு இருக்கேன்னு தன்னிடம் சொன்னதாக கலையரசன் பேட்டியில் கூறிஉள்ளார்..." என்று தெரிவித்திருந்தார். 


கலையரசன் மேலும், “தனக்கு சப்போர்ட்டுக்கு ஒருத்தர் வேணும்னு தான் சும்மாவே சண்டை போடுற கம்ருதீனை பார்வதி வைச்சிருக்காங்க..." என்றும் கூறியிருந்தார். கலையரசனின் இந்தக் கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றது. 

Advertisement

Advertisement