சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், விஜயா வீட்டில் உள்ள பெண்கள் எல்லாரும் பாண்டிச்சேரி சென்ற காரணத்தினால் வீட்டில் உள்ள ஆம்பளைகள் சேர்ந்து சமைக்கின்றனர். இதனால் ஆளுக்கு ஒரு வேலை செய்து சமையல் வேலையை முடிக்கின்றார்கள்.
இன்னொரு பக்கம் வீட்டில் யாரும் இல்லாத காரணத்தினால் முருகன் சவாரி கொடுத்த ரோகினியின் உறவினர்களை செல்வத்தை அழைத்துச் செல்லுமாறு முத்து சொல்லுகின்றார். ரோகிணியும் அவருடைய அம்மாவிடம் தான் பிளான் போட்டதுப்படியே நடந்து விட்டது இன்னைக்கு ஒரு நாள் டென்ஷன் இல்லாமல் இருக்கலாம் என்று கூறுகின்றார்.
இதை தொடர்ந்து வீட்டில் சமையல் வேலை முடிந்ததும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட முத்து, மனோஜ், ரவி மற்றும் அண்ணாமலை இருக்கும்போது, அங்கு அண்ணாமலையின் உறவினர்கள் வந்து கல்யாண பத்திரிகை வைக்கின்றார்கள். இதன் போது அங்கிருந்த அண்ணாமலையின் பிள்ளைகளிடம் எப்போது உங்க வீட்டில் விசேஷம் என்று கேட்கின்றனர்.

அதன் பின்பு அவர்களை சாப்பிடுமாறு அண்ணாமலை சொல்ல, மனோஜ் வேண்டாம் என்று தடுக்கின்றார். ஆனாலும் அண்ணாமலை அவர்களை சாப்பிட வைத்து அனுப்புகின்றார். இதனால் சாப்பாடு முடிந்து விட்டது என்று மனோஜ் புலம்பித் தள்ளுகின்றார்.
இறுதியில் சிந்தாமணியின் மகளோடு சத்யா காபி குடிக்கின்றார். இதன்போது சத்யா தன்னுடைய பேமிலி பேக்ரவுண்ட் பத்தி சொல்லுகின்றார். அதேபோல அவரும் தன்னுடைய அம்மா, அப்பா பிரிந்த கதையை சொல்ல முனைய, சத்யா அதை வேண்டாம் என்று சொல்லுகின்றார். இதனால் அவர் இம்ப்ரஸ் ஆகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!