• Nov 07 2025

ரொம்ப நல்லவன் வேஷம் போட்டு ஏமாத்தாத .! அமித் -ஐ சரமாரியாக தாக்கிய FJ?

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின்  சீசன் 9 இன்றுடன் 33வது நாளில் காலடி வைத்துள்ளது.  இன்றைய நாளில் வெளியான முதலாவது ப்ரோமோவில்  அமித் - FJ  இடையே வாக்குவாதம் நடைபெற்றுள்ளது.  அதில் என்ன நடக்குது என்பதை விரிவாக பார்ப்போம். 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதத்தை  பூர்த்தி செய்துள்ளது. இந்த சீசனில் பங்கு பற்றிய 20  போட்டியாளர்களுள்  5 பேர் வெளியேறினர்.  தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் நான்கு வைல்ட் கார்ட் என்ட்ரிஸ் மற்றும் விருந்தினராக மூன்று பேரும் வந்துள்ளனர். 

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீஸனும் ஒவ்வொரு விதத்தில் பிரபலமாக காணப்படும். ஆனால் இந்த சீசன் சர்ச்சைக்குரியதாகவே காணப்படுகிறது. ஆனால் தற்போது தான் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த புதிய போட்டியாளர்களால் பிக் பாஸ் இல்லமே சூடு பிடித்துள்ளது.


இந்த நிலையில், இன்றைய தினம் வெளியான  பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் முதலாவது ப்ரோமோவில்,  திவாகர் நான் என்னுடைய கருத்தை பேசிக் கொண்டிருக்கின்றேன் என்று ஹவுஸ்மேட்சுடன் பேச,  உங்களுடைய கருத்தை அங்காள போய் பேசுங்க என்று FJ சொல்லுகின்றார்.

அதன் பின்பு சபரியுடன் அமித் பேசிக் கொண்டிருக்க,   ரொம்ப நல்லவன் வேஷம் போடாதீங்க என்று FJ குரல் கொடுக்கின்றார்.  மேலும் அந்த நேரத்தில், காலையில அந்த ஐடியாவை யார் கொடுத்தா?  என்று அமித்தை பார்த்து FJ கேள்வி எழுப்பினர்.

அதற்கு அமித் நீங்கதான் அந்த ஐடியாவை கொடுத்தீங்க  என்று சொல்ல,  அப்படி என்றால் அதனை கெஸ்ட் கேட்கும் போது சொல்லி இருக்கலாம் தானே,  அப்போது மட்டும் தேங்க்யூ தேங்க்யூ என்று சொல்லத் தெரியுது தானே,  உங்களுக்கு கொஞ்சமாவது மனசாட்சி இருந்தால் சொல்லி இருப்பீங்க என்று  சொல்லுகின்றார். 

ஆனாலும் தான் உண்மையிலேயே மறந்து விட்டதாக அமித்   சொல்லுகின்றார். இதனால்  இருவருக்கும் இடையில் வாக்குவாதம் நீளுகின்றது. இது தான் தற்போது வெளியான ப்ரோமோ.






 

Advertisement

Advertisement