பிக்பாஸ் சீசன் 9 புது பருவத்துக்கு நுழைந்து வருகிறது. ஆரம்பத்தில், மெதுவான பயணமாகத் தொடங்கிய, இந்நிகழ்ச்சி இப்போது வீட்டின் சூழ்நிலையால் வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. தினசரி எபிசொட்கள் திருப்பங்களைக் கொண்டிருக்க, இப்போது ரசிகர்கள் கண்ணோட்டத்தை கவர்ந்திருக்கிறார்கள் பார்வதி மற்றும் திவாகர்.
இந்நிலையில், பார்வதி பற்றிய வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி, ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில் பார்வதி தனது மனவுணர்வுகளை வெளிப்படையாக கூறுகின்றார்.
வீடியோவில் பார்வதி வாட்டர் மெலன் திவாகரைப் பார்த்து," நான் சொல்லுறது உங்களுக்கு புரியுதா... இல்லையா.. என்று கேட்கிறார். மேலும் எல்லாரும் சேர்ந்து குத்திக் காட்டுறாங்க... அப்ப கூட எதுவுமே பண்ண மாட்டீங்களான்னு கேட்கிறார்.
அத்துடன் நான் யாரை நம்பியும் கிடையாது என்னோட விளையாட்டை எனக்கு ஆடத்தெரியும். முதல் வாரத்திலிருந்தே எல்லாரும் என்னை குத்திக் காட்டுறாங்க.. எனக்கு எப்புடி கடுப்பா இருக்கும்." என்கிறார்.
பார்வதியின் இந்த உணர்ச்சி வெடிப்பு நிகழ்ச்சியின் TRP விலையை உயர்த்தும் வகையில் காணப்படுகிறது. அதேசமயம் இவற்றை எல்லாம் கேட்ட திவாகர் எதுவுமே கதைக்காமல் அமைதியாக நிற்கிறார்.
Listen News!