• Jan 15 2025

இந்தியன் தாத்தாட மிஸ்டேக் எல்லாத்தையும் இணையத்தில் சுட்டிக் காட்டும் நெட்டிசன்கள்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஜூலை மாதம் வெளியான திரைப்படம் தான் இந்தியன் 2. இந்தத் திரைப்படம் வெளியாவதற்கு முன்பு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்டது. கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக இழுபட்டு வந்த இந்த திரைப்படம் ஒரு வெளியாக  ரிலீஸுக்கும் வந்தது.

உலக நாயகன் கமலஹாசன் நடித்த இந்த திரைப்படத்தில் சித்தாத், பாபி சிம்ஹா, ப்ரியா பவானி சங்கர், சமுத்திரகனி உட்பட பல  பிரபலங்கள் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார்.

கிட்டத்தட்ட 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. சங்கர் இயக்கிய படங்களிலேயே இந்தியன் 2 படத்திற்கு கொடுக்கப்பட்ட நெகட்டிவ் விமர்சனம் போல வேறு எந்த படத்திற்குமே கிடைக்கவில்லை அந்த அளவுக்கு இந்த படம் படு விமர்சனத்திற்கு உள்ளது.

இந்த நிலையில், இந்தியன் 2 திரைப்படம் நேற்றைய தினம் ஓடிடியில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது. அதற்கும் ஒரு ப்ரோமோ மூலம் படத்தை வெளியிட்டார்கள்.


சில படங்களுக்கு தியேட்டரில் சரியான ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை என்றால் ஓடிடியில் ரெஸ்பான்ஸ் நன்றாக கிடைக்கும். ஆனால் இந்தியன் 2 படத்தை பொருத்தவரை தியேட்டரில் கிடைத்த ரெஸ்பான்ஸை விட ஓடிடியில் இன்னும் அதிகமாகவே நிட்டிசன்கள் விமர்சித்து வருவதாக கூறப்படுகிறது.

அதிலும் அந்த படத்தின் ஒவ்வொரு காட்சியையும் எடுத்து போட்டு இதில் என்ன குறை இருக்கு என கூறி சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருவதாக சொல்லப்படுகின்றது.

மொத்தத்தில் இந்தியன் 2 படத்தை பெருமளவு பங்கம் செய்து வருவதாக கூறப்படுகிறது. தாத்தா வராரு கதறவிட போறாரு என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப உண்மையிலேயே இந்தியன் தாத்தா ரசிகர்களை கதறத்தான் விட்டிருக்கின்றார் என்று குறிப்பிட்டு வருகின்றார்கள்.

பிரபல இயக்குனராக காணப்படும் சங்கருக்கும் உலக நாயகன் கமலுக்கும் இந்த படம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் இந்தியன் 3 திரைப்படம் எப்படி வரப் போகின்றது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement