• Sep 21 2024

நயன்தாராவின் புதிய வீட்டிற்கு இவர்களுக்கு மட்டும் தான் அழைப்பா..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை படித்து முன்னணியில் இருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் சமீபத்தில் தன் 7வருட காதலரான விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார்.பிரமாண்டமாக நடைபெற்ற இத்திருமணத்தில் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதையடுத்து, ஷாருக்கானுடன் ஜவான் படத்தில் படத்தில் நடித்து வருகிறார்.இவ்வாறு இருக்கையில் , நயன் தாரா ஏற்கனவே சென்னை போயஸ் கார்டனில் வீடு வங்கியதாக தகவல் வெளியான நிலையில் இப்போது, முக்கிய தகவல் ஒன்று வெளியாகிறது.

அதன்படி நயன்தாரா பெயரில் ஒரு வீடும் விக்னேஷ் சிவன் பெயரில் 1 வீடூம் என 8000சதுர அடி கொண்ட இரண்டு வீடுகள் வாங்கியுள்ளதாகவும் இந்த வீடுகளில் 1500 சதுர அடியில் ஒரு குளியல் அறை உள்ளதாகவும் இதில் நீர் வீழ்ச்சி போன்ற செட்டிங்ஸ் உள்ளதாகவும் ஒரு தியேட்டர் இதிலுள்ளதாகவும் மொத்தம் இந்த வீட்டில் 3 மற்றும் 4 வது தளத்தில் இவர்கள் பயன்படுத்த லிப்டும் வேலையாட்களுக்கு தனி லிப்டும் என குறிப்பிடப்படுகின்றது.

அத்தோடு இந்த வீட்டிற்கு பாலிவுட் ஸ்டார்களின் வீடுகளுக்கு இன்டீரியர் டிசைன் செய்யும் பிரபல நிறுவனம் ரூ.25 கோடியில் இன்டீரியர் டிசைன் செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

இவ்வாறுஇருக்கையில் இந்த பிரமாண்ட வீட்டு பணிகள் ஜோராக நடந்து வருவதால், இப்பணிகள் முடிவடைந்த பின் இந்த ஆண்டிற்குள் நயன்தாரா – விக்னேஷ் தம்பதிகள் புதிய வீட்டில் குடிபுகுவார்கள் எனத் தெரிகிறது.

மேலும் இப்புதிய வீட்டின் கிரஹப்பிரவேசத்திற்கு சினிமா நட்சத்திரங்கள் அழைக்கபடலாம் எனவும் தகவல் வெளியாகிறது.அத்தோடு திருமணத்திற்கு வந்த சூப்பர் ஸ்டார் முதல் ஜவான் பட நடிகர் சாருக்கான வரை புதுவீட்டிற்கு அழைக்கப்படுவார்களாம். அத்தோடு திருமணத்திற்கு வருகை தராத தனது நெருங்கிய தோழியான சமந்தாவும், அழைக்கப்படுவார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement