• May 09 2024

நயன்தாராவின் 75-ஆவது படம் தொடர்பான புதிய அப்டேட்…யாரெல்லாம் நடிக்கவுள்ளனர் தெரியுமா?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சினிமா உலகிலே லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவரே நடிகை நயன்தாரா. தமிழ் சினிமாவில் 'ஐயா' என்ற படத்தினூடாக கதாநாயகியாக அறிமுகமான இவர் தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனப் பல தென்னிந்திய மொழி படங்களில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்து இன்று உச்ச நட்சத்திர நடிகையாக மாறியிருக்கின்றார். இவர் சமீபத்தில் பாலிவுட்டிலும் காலடி எடுத்து வைத்திருக்கின்றார். அதாவது அட்லீ இயக்கத்தில் உருவாகி வருகின்ற 'ஜவான்' என்ற படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

அத்தோடு சமீபத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் நடித்துள்ளார் நயன்தாரா. அஹ்மத் இயக்கியுள்ள இப்படத்திற்கு 'இறைவன்' என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் உடைய படப்பிடிப்புக்கள் யாவும் முடிவடைந்த நிலையில் தற்போது பின்னணிப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும் இப்படத்தை வருகிற அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகைக்கு வெளியிட திட்டமிட்டு உள்ளனர் படக்குழுவினர்.

இவ்வாறு பல படங்களிலும் பிஸியாக நடித்து வருகின்ற நயன்தாரா நடிக்க உள்ள 75-ஆவது படம் குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இப்புதிய படத்தை ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனமும், டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ளதாகக் கூறப்படுகின்றது. அத்தோடு ஹீரோயினை மையமாக வைத்து இப்படம் உருவாக உள்ளதாகவும் இப்படத்தை அறிமுக இயக்குநரான நிலேஷ் கிருஷ்ணா என்பவர் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. மேலும் இவர் இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நயன்தாரா நடிக்க உள்ள 75-வது படத்தின் படப்பிடிப்புக்கள் விரைவில் தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இப்படத்தில் நயன்தாராவோடு இணைந்து சத்யராஜ் மற்றும் ஜெய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். அத்தோடு 'மூக்குத்தி அம்மன்', 'மிஸ்டர் லோக்கல்', 'தானா சேர்ந்த கூட்டம்', 'காதலும் கடந்துபோகும்' போன்ற பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருந்த தினேஷ் கிருஷ்ணன் இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்யவுள்ளார் எனக் கூறப்படுகின்றது.

இப்படத்தில் சத்தியராஜ், ஜெய் ஆகியோரும் நடிப்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இப்போதிருந்தே பெரும் எதிர்பார்ப்புக்கள் கிளம்பத் தொடங்கியிருக்கின்றன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement