• Jan 19 2025

நயன்தாரா லீட் ரோலில் நடித்துள்ள அன்னபூரணி படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்- எப்படி இருக்கு என்று பாருங்க

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நயன்தாரா. தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்த இவர் பாலிவூட்டில் இறுதியாக அட்லி நடிப்பில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

தமிழில் சமீபத்தில் ஜெயம் ரவி -நயன்தாரா இணைந்து நடித்திருந்த இறைவன் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. தனி ஒருவன் படம் மூலம் இவர்களின் கெமிஸ்ட்ரி சிறப்பாக பேசப்பட்ட நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இறைவன் படம் ரசிகர்களை கவரத் தவறியது.


இந்நிலையில் நயன்தாரா லீட் கேரக்டரில் நடித்துள்ள அன்னபூரணி படம் வரும் டிசம்பர் 1ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. நாட் ஸ்டூடியோஸ், ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் இணைந்து படத்தை தயாரித்துள்ளனர். 

ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்த ஒரு பெண், சமையல் துறையில் சாதிக்க நினைத்து அதில் களமிறங்குவதை மையமாக கொண்டு இந்தப் படத்தின் திரைக்கதையை உருவாக்கி இயக்கியுள்ளார் நிலேஷ் கிருஷ்ணா.இந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் தற்பொழுது வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement