• Apr 29 2026

கணவன் மனைவியை கொன்று தற்கொலை – இணைய வெறிக்கு நடிகை ஹேமா கடும் கண்டனம்!

shali / 56 minutes ago

Advertisement

Listen News!

சென்னையில் மனைவியை கொன்று விட்டு கணவரும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் புடவைகளை எளிதாக கட்டும் வகையில் ரெடிமேடாக மாற்றித் தரும் பணியை செய்து வந்தவர் நாகலட்சுமி என தெரிய வந்துள்ளது. இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலரும் பின்தொடர்ந்து வந்த நிலையில், குடும்ப வாழ்க்கையிலும் ஏற்பட்ட பிரச்சினைகள் இவ்வளவு பெரிய துயரத்தில் முடிந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


நேற்றைய தினம் தம்பதியருக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் கடுமையாக மாறியதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கணவர் சுப்ரமணியன், மனைவி நாகலட்சுமியை அரிவாளால் தாக்கி கொலை செய்து விட்டு, பின்னர் தானும் உயிரை மாய்த்துக் கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தம்பதிக்கு மருத்துவம் படிக்கும் இரண்டு மகன்கள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து சின்னத்திரை நடிகை ஹேமா ராஜ்குமார் தெரிவித்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சம்பவத்தை தொடர்ந்து நாகலட்சுமி குறித்து சிலர் இணையத்தில் வெளியிட்ட மோசமான கருத்துகளுக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “ஒரு பெண் இறந்த பிறகும் அவளை தவறாக பேசுவது ஏன்? உண்மையை அறியாமல் தீர்ப்பு வழங்குவது சரியா?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அவரது இந்த பதிவு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

Advertisement