சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், வீட்டிற்கு வந்த முத்துவும் மீனாவும் ஒரு சந்தோஷமான விஷயம் சொல்ல வேண்டும் என்று கூறி, பைனான்சியருக்கு 10 லட்சம் ரூபாய் கட்டியதை தெரிவிக்கின்றனர்.
இதை கேட்ட விஜயா, “கடன் வாங்கித்தான் கட்டியிருப்பீங்க” என்று பேச, “உனக்குத்தான் அந்த பழக்கம் இருக்கு” என்று அண்ணாமலை பதிலடி கொடுக்கிறார். அதன் பின்னர், “நாங்கள் கஷ்டப்பட்டு உழைத்த காசுல்தான் கட்டினோம். மீனாவின் தாலி கொடியையும் வைத்து விட்டோம்” என்று அவர்கள் கூறுகின்றனர்.
அந்த நேரத்தில் அங்கு மனோஜை தேடி போலீஸ் வருகின்றனர். மேலும், அவர் தந்தையின் கையெழுத்தை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவரை கைது செய்து கூட்டிச் செல்கின்றனர். இதனால் விஜயா கதறி துடித்து வீதியில் விழுந்து அழுகின்றார்.

அதற்குப் பிறகு மனோஜை வெளியே எடுக்க வக்கீலை அழைத்து வருகின்றனர். ஆனால் கேஸ் மிகவும் ஸ்ட்ராங்காக இருப்பதால், அவரை வெளியே எடுப்பது கஷ்டம் எனவும், எதிர் அணியுடன் சமரச பேச்சு நடத்துமாறு கூறுகின்றனர்.
இன்னொரு பக்கம், சிந்தாமணியை பார்த்து ரோகினி மனோஜ்க்கு உதவுமாறு கூறுகின்றார். ஆனால் “இவையெல்லாம் உனக்காகத்தான்” என்று சிந்தாமணி பிளேட்டை மாற்றுகிறார். இதுவே இன்றைய எபிசோட்.
Listen News!