• Jul 05 2026

திருச்செந்தரில் ஆன்மீக பயணம் மேற்கொண்ட தவெக தலைவர் விஜய்.. வைரலாகும் புகைப்படங்கள்

shali / 2 months ago

Advertisement

Listen News!

தவெக தலைவர் விஜய் அண்மையில் திருச்செந்தூர் முருகன் கோயில் சென்றார் என்பது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அதிகாலை நேரத்தில் கோவிலுக்கு வந்த அவர், பக்தர்களுடன் இணைந்து முருகப்பெருமானை தரிசித்தார். விஜய் கோவிலுக்கு வந்தவுடன் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக மாறியது.


கோவில் நிர்வாகம் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றது. இதனுடன் பாரம்பரிய முறையில் வேல் வழங்கி கௌரவித்தது முக்கிய அம்சமாக அமைந்தது. ஆன்மிக அடையாளமாக கருதப்படும் இந்த வேல் வழங்கப்பட்ட சம்பவம், விஜய்யின் இந்த தரிசனத்திற்கு மேலும் சிறப்பு சேர்த்ததாக பலரும் கருதுகின்றனர்.


விஜயின் சமீபத்திய அரசியல் பயணம் மற்றும் அவரது பொதுமக்கள் தொடர்பு நடவடிக்கைகளின் பின்னணியில் இந்த தரிசனம் இடம்பெற்றுள்ளதால், இது அரசியல் ரீதியிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

Advertisement

Advertisement