• Apr 29 2026

இசையமைப்பாளர் மீது அதிர்ச்சி குற்றச்சாட்டு.. – ரகசிய கேமரா சதி வெளிச்சம் போட்ட ஸ்வாகதா!

shali / 1 hour ago

Advertisement

Listen News!

பிரபல பாடகியான ஸ்வாகதா கிருஷ்ணன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னை ஒரு முன்னணி தமிழ் இசையமைப்பாளர் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டதாக அவர் அதிர்ச்சி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். குறிப்பாக, அந்த நபர் தனது ஸ்டுடியோவில் ரகசிய கேமராக்கள் வைத்து பெண்களை வீடியோ எடுத்ததாகவும், தனது செயல்களை ஆன்மீகத்தின் பெயரில் நியாயப்படுத்த முயன்றதாகவும் அவர் கூறியுள்ளார்.


மேலும், இந்த சம்பவங்களால் மன உளைச்சலுக்கு ஆளானதால் தான் சினிமாவை முழுமையாக விட்டு விலக முடிவு செய்ததாகவும், சென்னை வாழ்க்கையை விட்டு வெளியேறி ரிஷிகேஷில் குடியேறியதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த 6 ஆண்டுகளாக அங்கு அமைதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு துணி வியாபாரம் செய்து வருவதாகவும் கூறினார்.

இதேவேளை, இந்த குற்றச்சாட்டில் ஜி.வி. பிரகாஷ் குமார், ஜிப்ரான், அனிருத் ரவிச்சந்தர், டி. இமான் ஆகியோர் சம்பந்தமில்லை என அவர் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.

பிக் பாஸ் மூலம் பிரபலமான மாயாவின் அக்காவான ஸ்வாகதாவின் இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, இசைத் துறையில் அதிர்ச்சியையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.


Advertisement

Advertisement