7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன என தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத படங்களை கொடுத்த இயக்குநர் செல்வராகவன், தனது தனிப்பட்ட வாழ்க்கையில் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
இவர் ஆரம்பத்தில் நடிகை சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்தார். எனினும் இவரின் முதல் திருமணம் கருத்து வேறுபாடுகளால் முடிவுக்கு வந்தது.
அதன் பிறகு தனது உதவி இயக்குநரான கீதாஞ்சலியை திருமணம் செய்துகொண்ட செல்வராகவனுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். மாலை நேரத்து மயக்கம் என்ற படத்தை இயக்கிய கீதாஞ்சலி, திரையுலகிலும் தனக்கென தனி இடத்தை உருவாக்கியுள்ளார்.

எனினும் இவர்களும் விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதிலும் கீதாஞ்சலி தனது இன்ஸ்டாகிராமிலிருந்து கணவர் செல்வராகவனுடனான அனைத்து புகைப்படங்களையும் நீக்கியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விவாகரத்து தொடர்பான தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், செல்வராகவனும் கீதாஞ்சலியும் இது தொடர்பில் முழு மௌனம் காத்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகரும் இயக்குனருமா செல்வராகவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட பதிவு தற்போது வைரல் ஆகி வருகின்றது.
அதன்படி அதில் அவர் கூறுகையில், கடந்த காலத்தை நினைத்துக் கொண்டிருப்பது போல் மிகக் கொடிய விஷம் எதுவும் இல்லை.. எதிர்காலத்தை நினைத்துக் கொண்டிருப்பது போல் முட்டாள்தனமும் எதுவும் இல்லை.. இந்த நொடி மட்டுமே நிஜம்.. அமைதி.. என தெரிவித்துள்ளார்
Listen News!