• May 05 2024

குல தெய்வம் கோயிலுக்கு திடீர் விசிட் அடித்த நயன்-விக்கி தம்பதியினர்.. தீயாய் பரவும் புகைப்படம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நட்சத்திரத் தம்பதிகளாக வலம் வருபவர்கள் நயன் - விக்கி. 'நானும் ரெளடிதான்' என்ற படத்தில் நடித்த போது இருவருக்கும் இடையே மலர்ந்த காதல் நாளுக்கு நாள் அதிகரித்து கடைசியில் கல்யாணத்தில் முடிந்தது.


அந்தவகையில் கடந்த ஜூன் மாதம் நயன்தாராவிற்கும் விக்னேஷ் சிவனிற்கும் கோலகலமாக திருமணம் நடந்து முடிந்தது. இதில் திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து சில மாதங்கள் கழித்து வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்று எடுத்தனர். அந்த ஆண் குழந்தைகளுக்கு, உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் என பெயரிட்டனர்.


நயன்-விக்கி தம்பதியினர் காதலித்த காலம் முதல் கல்யாணத்திற்குப் பின்னரும் பல இடங்களுக்கு சுற்றுலா சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.


இந்நிலையில் தற்போது குலதெய்வம் கோவிலுக்கு செல்வதற்காக இன்று திருச்சி விமான நிலையத்திற்கு இவர்கள் சென்றுள்ளனர். அந்தவகையில் ஏர்போர்ட் லுக்கில் இருக்கும் இவர்களின் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement