• May 07 2024

ஆரம்பமாகியது கிழக்கு வாசல் சீரியலின் ஷுட்டிங்- விஜய்யின் தந்தையுடன் இணைந்த பிரபலங்கள்- வைரலாகும் போட்டோஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!


சமீபகாலமாக திரைப்படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பிற்கு நிகராக சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கும் கிடைத்து வருகின்றது.அதிலும் சன்டிவி, விஜய் டிவி, ஷு தமிழ் ஆகிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் ரிஆர்பியிலும் முன்னணியில் நிற்கின்றன.


பொதுவாக விஜய் டிவி சீரியல்களில் நடித்து வரும் பிரபலங்கள் இலகுவாக ரசிகர்களைக் கவர்ந்து விடுகின்றனர்.அத்தோடு இதில் புதுப்புது சீரியல்களும் ஆரம்பித்து வருகின்றன. அந்த வகையில் அண்மையில் மகாநதி, பாரதி கண்ணம்மா சீசன் 2, சிறகடிக்க ஆசை போன்ற சீரியல்கள் ஆரம்பமாகியுள்ளன.


இதனை அடுத்து தற்பொழுது ராதிகாவேின் ராடன் தயாரிப்பு நிறுவத்தினால் தயாரிக்கப்படும் கிழக்கு வாசல் என்னும் சீரியல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் இந்த சீரியலின் படப்பிடிப்புத் தளத்தில் எடுத்த புகைப்படங்களை ராதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடடுள்ளார்.அவை வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement