• May 19 2024

என்னுடைய கணவர் இல்லை முன்னாள் கணவர்- நாகசைத்தன்யாவை முற்றாக வெறுத்து ஒதுக்கிய சமந்தா

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல பாலிவூட் இயக்குநரான கரண் ஜோகர் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி தான் காபி வித் கரண் . இந்த நிகழ்ச்சியானது இதுவரை 7 சீசன்களைக் கடந்துள்ளது.அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் அண்மையில் சமந்தா மற்றும் பிரபல ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார் இருவரும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்ச்சியில் சமந்தா ஓ சொல்லுறியா பாடலுக்கு நடனமா இருந்தார்.இது குறித்த வீடியோக்களும் வெளியாகியிருந்தது.

அத்தோடு இதில் அவர் சமந்தாவின் விவாகரத்து குறித்த கேள்வியை கேட்கும்பொழுது, “உங்களுடைய கணவர்” என்று குறிப்பிட்டு பேச, அப்போது இடைமறிக்கும் சமந்தா, “முன்னாள் கணவர்” என்று திருத்தம் செய்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் சமந்தா நடிப்பில் தற்பொழுது, சகுந்தலம், யசோதா உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றது. முன்னதாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில், ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement