• Jan 19 2025

போன் எடுத்த மீனாவை சரமாரியாக தாக்கிய முத்து! ரோகிணிக்கு அடுத்த அதிர்ச்சி? அப்செட்டில் விஜயா

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்றுதான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், மீனா, ரோகிணி, ஸ்ருதி ஆகிய மூவரும் கிச்சனிலிருந்து கல்யாணத்துக்கு முதலில் எப்படி இருந்தோம், இப்ப எப்படி இருக்கோம் என பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

மறுநாள் விடிந்ததும்  மனோஜ் மாடியில் இருந்து வர, விஜயா பதட்டத்தில் என்ன ஆச்சு? ஏன் மாடில தூங்கினா? என்று கேட்க, மனோஜ் ஒன்றுமே சொல்லாமல் ரூமுக்கு போகிறார்.

அண்ணாமலையிடம் மனோஜ் மொட்டை மாடியில் தூங்கிய  விஷயத்தைப் பற்றி சொல்லி, நடந்த விஷயம் என்ன என்று தெரியாமல் புலம்பி கொண்டிருக்கிறார் விஜயா.



இதைத்தொடர்ந்து ரோகிணியிடம் வந்து என்ன எதுவும் பிரச்சினையா? அப்படி என்று கேட்க, அப்படி எதுவும் இல்லை ஆண்டி என்று சொல்கிறார். அதன் பின் மனோஜ் தான் ஹோட்டலில் வேலை செய்த விஷயத்தை ரோகிணியிடம் சொல்லி இனி என் தகுதிக்கேற்ற மாதிரி வேலை கிடைத்தால் தான் போவேன் என சொல்லுகிறார்.

மறுபக்கம் முத்து மாடியில் இருந்து வர விஜயா ஒன்றும் கேட்கவில்லை. ரூமுக்கு போன முத்து சத்யாவின் வீடியோவை பார்த்து ஆவேசத்தில் பெட்டில் குத்தி கொண்டு இருக்க, அதை மீனா பார்த்துவிட்டு அவரின் போனை எடுக்க வருகிறார். குளிக்கப் போன முத்து மீண்டும் வந்து அடுத்தவங்களோட போன் எடுக்குறியே அப்படி என்று திட்டிவிட்டு மீண்டும் போனை எடுத்துக் கொண்டு குளிக்கச் செல்கிறார்.

இன்னொரு பக்கம் ரவியும் மொட்டை மாடியில் இருந்து வர விஜயா ரொம்பவும் பதறிப் போய் அவரிடம் கேள்வி கேட்கவும், அதை கவனிக்காமல் நேரே மீனாவிடம் வந்து, ஸ்ருதி ரொம்ப ஃபீல் பண்ணி இருப்பா.. சாப்பிடாம இருந்திருப்பாள் என சொல்ல, அதற்கு நீங்களே ரூம்க்கு போய் பாருங்க என மீனா சொல்கிறார்.

ரூமுக்கு வந்த ரவி ஸ்ருதி பாட்டு போட்டு ஆட்டமாடி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இதன் போது அவர்களுக்கு இடையில் வாக்குவாதம் நடக்கிறது.

இதையெல்லாம் பார்த்து விஜயா எல்லாரும் முறுக்கிக்கொண்டு திரிகிறார்கள் ஏன் என்று தெரியவில்லை என அண்ணாமலையுடன் பேசிக் கொண்டிருக்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்

Advertisement

Advertisement