• Oct 16 2024

அண்ணாமலையிடம் முத்து கேட்ட கேள்வி..வெட்கத்தில் ஓடிய மீனா – பல்பு வாங்கிய ரோகினி சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் விஜயா காபில ஒரே சக்கரையா இருக்கு என்று சொல்லிக் கொண்டிருக்க அண்ணாமலை எனக்கு ஒன்னும் அப்படி தெரியலையே உனக்கு சக்கர அதிகமா இருக்கா அய்யோ அப்படின்னு உனக்கு வந்துடுச்சா என்று கேள்வி கேட்க விஜய்யா என்னது என்று அதிர்ச்சியாக சக்கர தான் என்று சொல்ல கூடவே ரவியும் சேர்ந்து கலாய்த்து விடுகிறார்.


அடுத்து மனோஜ் மற்றும் ரோகினி இருவரும் காபி குடிக்க வர விஜயா இந்த காபி குடிக்காதீங்க என்று தடுத்து நிறுத்துகிறார். முத்து வேக வேகமாக ரூமில் இருந்து வெளியே வந்து அப்பாவிடம் நீ தாத்தாவுக்கு கல்யாணம் ஆகி எவ்வளவு நாள் கழிச்சு பொறந்த என்று கேட்க அவர் அதெல்லாம் எனக்கு சரியா ஞாபகம் இல்லையே என்று சொல்கிறார்.


சரி உனக்கு கல்யாணம் ஆகி எவ்வளவு நாள் கழிச்சு இவன் பொறந்தான் என்று கேட்க 11 மாதத்திலேயே மனோஜ் பிறந்து விட்டதாக சொல்ல முத்து 11 மாசம் ஆகுமா.? இல்ல லேட்டா கூட ஆகுமா என்று கேள்வி மேல் கேள்வி கேட்க மீனா வெக்கப்பட்டு ஓடிவிடுகிறார். பிறகு அண்ணாமலையும் மீனாவும் முத்துவை போய் ரெடி ஆயிட்டு வா என்று அனுப்பி வைக்க மீனா ரூமுக்கு போய் முத்துவிற்கு டிரஸ் எடுத்துக் கொடுக்க என்ன இதெல்லாம் புதுசா இருக்கு என்று கேள்வி கேட்கிறார்.


இனிமே எல்லாம் இப்படித்தான் என்று சொல்லும் மீனா சர்ட் பேன்டை ஹின் பண்ணிட்டு வர சொல்ல முத்து நான் அப்படியெல்லாம் பண்ணதில்ல என்று சொல்ல மீனா எனக்காக பண்ணுங்க என்று சொல்லி வெளியே வர முத்துவும் அதேபோல் அணிந்து கொண்டு வர எல்லோரும் அதை பார்த்து ஆச்சரியப்படுகின்றனர்.


ரவி மற்றும் அண்ணாமலை முத்துவை சூப்பரா இருக்கு என்று சொல்லி பாராட்ட விஜயா எந்த பிளைட்ட பிடிக்கப் போற என்று நக்கல் அடிக்க மனோஜ் மற்றும் ரோகிணி எகத்தாளமாக சிரிக்கின்றனர். மீனா இப்ப எதுக்கு சிரிக்கிறீங்க அவருக்கு இந்த டிரஸ் நல்லா தான் இருக்கு என்று பரிந்து பேசுகிறார்.

உடனே முத்து நான் எப்படி வேணாலும் டிரஸ் பண்ணுவேன் ஏன் காசுல நான் எடுத்து போட்ட டிரஸ் இந்த ஓடு காலி மாதிரி திருட்டு பணத்தில் உட்கார்ந்து சாப்பிடல என்று சொல்ல ரோகிணி கோபப்பட அவன் உனக்கு ஏதாவது எடுத்துக் கொடுத்தா கூட அதுவும் திருட்டு காசு தான் என்று பதிலடி கொடுத்து இப்போ சிரி பார்க்கலாம் என்று நக்கல் அடிக்கிறார்.


அடுத்து முத்து மீனா பின்னாடியே நெளிந்து கொண்டே சென்று எனக்கு லேட் ஆச்சு நான் கிளம்புறேன் என்று சொல்ல மீனா சாப்பிட்டு போங்க வெறும் வயித்தோடு போகக்கூடாது என்று சொல்ல முத்து வேண்டாம் என்று சொல்லிக் கொண்டே இருக்க பூரியையும் கிழங்கையும் ஊட்டி விடுகிறார். ரெண்டு வாய் வாங்கியதும் முத்து சூப்பரா இருக்கு நானே சாப்பிடுறேன் என உட்கார்ந்து சாப்பிடுவது மட்டுமல்லாமல் அப்பாவையும் ரவியையும் கூப்பிட அவர்களும் வந்து உட்கார்ந்து சாப்பிடுகின்றனர்.


மனோஜ் நானும் போய் சாப்பிடுறேன் என எழுந்து வர முத்து இதெல்லாம் சாப்பிட்டா அசிடிட்டி வந்துடும் உன் பொண்டாட்டி சொல்ற மாதிரி ஏ பி சி ஜூஸ் குடி என்று பல்பு கொடுக்கிறார். பிறகு முத்து வேலைக்கு கிளம்ப மீனா பின்னாடி வந்து கையசைத்து வழி அனுப்ப முத்து காரில் இருந்து இறங்கி வந்து எதுக்கு கூப்பிட்ட என்று கேட்க நான் டாட்டா சொன்னேன் என்று சொல்கிறார்.

இப்படியே ஒரு போட்டோ எடுங்களேன் என்று சொல்ல முத்து உன்னையா என்று கேட்க இல்ல நம்ம ரெண்டு பேரும் சேர்த்து செல்பி எடுங்க, ஆசையா இருக்கு என்று சொன்னதும் முத்து செல்பி எடுக்கிறார். பிறகு டாட்டா சொல்லி வழி அனுப்ப முத்துவும் சந்தோஷமாக வேலைக்கு கிளம்புகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

அதன் பிறகு வெளியான ப்ரோமோ வீடியோவில் ரோகினி போன் அடிக்க விஜயா எடுத்து பேச அவரது அம்மா கல்யாணி என்று பேசத் தொடங்குகிறார்.


Advertisement