• Dec 04 2023

மூன்றே மாதத்தில் 1000 கோடிக்கு மேல் இலாபம்! ஏனைய சேனல்களை அலறவைத்த சன் டிவி

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

இந்திய தொலைக்காட்சிகளில் முதன்மையான தொலைக்காட்சிகளில் ஒன்றான சன் டிவி மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொலைக்காட்சி ஆரம்பம் ஆனது முதல் தற்போது வரை தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொண்டு முன்னணி தொலைக்காட்சியாக சிறந்து விளங்கி வருகிறது.

1992ல் கலாநிதி மாறனால் ஆரம்பிக்கப்பட்ட இத் தொலைக்காட்சிக்கு போட்டியாக எத்தனை சேனல்கள் வந்தாலும் அவற்றால் தோற்கடிக்க முடியவில்லை. சீரியல், திரைப்படம், நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோ, செலிப்ரிட்டி ஷோ என வகைவகையாக நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி மக்களை கவர்ந்துள்ளது.


இந்நிலையில், 2023ல் ஜூலை முதல் செப்டம்பர் வரை, அதாவது இந்த மூன்று மாதங்களில் மட்டுமே சன் டிவிக்கு ரூ. 1048 கோடி வருவாய் கிடைத்துள்ளதாம். இது மாபெரும் தொகையாக பார்க்கப்படுகிறது. வெறும் மூன்று மாதத்திலே இவ்வளவு வருமானம் ஈட்டி மற்ற தொலைக்காட்சிகளை அலறவைத்துள்ளது சன் தொலைக்காட்சி.

Advertisement

Advertisement

Advertisement