• May 03 2024

தூக்கி எறிந்த அஜித்.. ஆனாலும் குறையாத அன்பில் விக்னேஷ் சிவன்.. குவியும் பாராட்டுக்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

நயன்தாராவின் கணவனும், பிரபல இயக்குநராகவும் இருப்பவர் விக்னேஷ் சிவன். அஜித் குமாரை வைத்து கட்டாயம் ஒரு படம் எடுக்க வேண்டும் என்பது இவரின் பல நாள் கனவாக இருந்து வந்தது. அந்த கனவு நினைவாகி விட்டது என்ற சந்தோஷத்தில் சமீபகாலமாக இருந்தார். ஆம் அது வேறெதுவுமில்லை, ஏ.கே. 62 படத்தை இயக்கும் வாய்ப்பு விக்னேஷ் சிவனுக்கு கிடைத்தது. ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் தற்போது இயக்குநரை மாற்றிவிட்டார்கள்


அதாவது ஏ.கே. 62 படத்திற்காக விக்னேஷ் சிவன் எழுதிய ஸ்க்ரிப்ட் தனக்குப் பிடிக்கவில்லை என்று கூறி அதை மாற்றச் சொன்னாராம் அஜித் குமார். ஆனால் முழு ஸ்க்ரிப்ட்டையும் அஜித்திடம் கொடுப்பதில் விக்னேஷ் சிவன் கால தாமதம் செய்தாராம். இதனைத் தொடர்ந்து இது வேலைக்கு ஆகாது என்று நினைத்து அவரை உடனே மாற்றிவிட்டார்கள்.


தனக்கு ஏ.கே. 62 பட வாய்ப்பு கிடைத்த நாளிலிருந்து ட்விட்டரில் அஜித் குமாரின் புகைப்படத்தைத் தான் தன்னுடைய கவர் பிக்சராக வைத்திருந்தார் விக்னேஷ் சிவன். மேலும் கடந்த சில நாட்களாக ஏ.கே. 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவில்லை என்று பேச்சு எழுந்தபோது கூட அந்த புகைப்படம் அப்படியே இருந்தது. ஆனால் சமீபத்தில் கவர் பிக்சரை விக்னேஷ் சிவன் மாற்றி தான் அப்படத்தில் இருந்து விலகியதை சூசகமாக அறிவித்தார்.

இவ்வாறு ஏகே 62-வில் இருந்து நீக்கப்பட்ட பின்னரும், அஜித் மீதான தீராத அன்பை விக்னேஷ் சிவன் தற்போது வெளிப்படுத்தி உள்ளது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. அதாவது அஜித் குழந்தைபோல் கியூட்டாக சிரித்தபடி இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாக பதிவிட்டு, அதற்கு ஹார்டின் எமோஷியையும் பறக்க விட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.


இதனைப் பார்த்த பலரும் வியந்து போயுள்ளனர். அதாவது விக்னேஷ் சிவன், அஜித்தின் தீவிர ரசிகர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அஜித் படத்தில் இருந்து நீக்கிய பின்பும் ஒரு ரசிகனாக அஜித் மீது அவர் அதீத அன்பு செலுத்தி உள்ளதைப் பார்த்து ரசிகர்கள் பலரும் நெகிழ்ந்து போய் உள்ளனர். அதுமட்டுமல்லாது விக்னேஷ் சிவனின் இந்த நல்ல மனசைப் பாராட்டியும் வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement