• Nov 05 2025

தெலுங்கில் விறுவிறுப்பாக ஓடுகிறது மிராய்...! உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் தெரியுமா?

Roshika / 1 month ago

Advertisement

Listen News!

2011 ஆம் ஆண்டு வெளியான சாம்பி ரெட்டி திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாகத் திரையுலகில் அறிமுகமான தேஜா சஜ்ஜா, இப்போது தெலுங்கு சினிமாவின் முன்னணி வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவர் என்கிற அளவுக்கு உயர்ந்துள்ளார். அவருடைய சமீபத்திய படம் மிராய், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டு இருக்கிறது.


பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கார்த்திக் கட்டாமானேனி இயக்கியுள்ள இந்தப் படத்தில், மனோஜ் மஞ்சு வில்லனாகவும், ரித்திகா நாயக், தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளனர். பீபில் மீடியா ஃபேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது.

திரைப்படம் வெளியான முதல் இரண்டு நாட்களில் ரூ.55.60 கோடி வசூலித்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தற்போது இந்த படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலித்துள்ள நிலையில், படக்குழு அதற்கான போஸ்டரையும் வெளியிட்டு, ரசிகர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளது.


மர்மம், அறிவியல் மற்றும் உணர்வுகளை மிக நுணுக்கமாகச் சொல்லும் மிராய், தெலுங்கு சினிமாவில் ஓர் மைல்கல்லாக மாறியுள்ளது. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம், வசூலிலும் விமர்சனங்களிலும் சீரான வரவேற்பைப் பெற்று வருகிறது.

Advertisement

Advertisement