• Mar 08 2026

முத்துவிடம் உண்மையை சொன்ன மீனா.. மனோஜை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் ரோகிணி.!

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில்,  பார்வதி நல்ல நண்பர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கதை சொல்லுகின்றார். அங்கு மீனாவும் இருக்கின்றார். அந்த நேரத்தில் ரோகிணி அங்கு வருகின்றார். 

பார்வதியிடம் தனக்கு  5 லட்சம் தருமாறு ரோகிணி கேட்க, சிவனுடன் பேசிய பார்வதி, ரோகிணியை நம்பி எப்படி பணம் கொடுப்பது,  மீனா கேரண்டி கொடுத்தால் பணம் கொடுப்போம் என்று சொல்லுகின்றார் .  ஆனால் மீனா நான் உனக்காக நிறைய விஷயம் பண்ணி விட்டேன்.  இதை முத்துவிடம் கேட்டுத்தான் செய்வேன் என்று சொல்லி சென்று விடுகின்றார். 

அதற்கு பின்பு நைட் தூங்கும்போது மீனா குற்ற உணர்ச்சியால் தூக்கம் வராமல் தவிக்கின்றார். இதனால்  ரோகிணி பற்றிய உண்மையை  முத்துவிடம் சொல்ல,  அவர் அந்த நேரம் பார்த்து வெளியே எழுந்து சென்று விடுகின்றார் .  இதன் போது ரோகிணி மீனா உண்மை சொன்னதை கேட்டு,  நான் இப்போது  யாருக்கும் தொல்லை இல்லாமல் சென்று விடுகின்றேன் என்று கிச்சனுக்கு சென்று  அழுது புலம்புகின்றார். அங்கு வந்த முத்து என்ன நடந்தது என்று கேட்க, மனோஜ் கடனில்  தவிப்பதாக  சொல்லி சமாளிக்கின்றார் .

இதை தொடர்ந்து  அண்ணாமலை சொத்தை நான்கு  பங்காக பிரிக்குமாறு  லோயரிடம் கூறுகின்றார்.  ஆனால்  முத்து, மீனா, ஸ்ருதி மற்றும் ரவி ஆகியோர் அதற்கு இப்போது அவசியம் இல்லை என்று மாறி மாறி பேசிக்கொண்டு இருக்க,  அதுதான் அப்பாவே பிரிக்க சொல்லிவிட்டார் தானே இதுல யாரும் தலையிட வேண்டாம் என்று சொல்லுகின்றார். 

மேலும் இது எங்களுடைய பிரச்சனை இதில் தலையிட வேண்டாம் என்று மீனாவையும் ஸ்ருதியையும் பார்த்து  மனோஜ் சொல்ல,  அவங்க இந்த வீட்டு மருமகள்கள். அவங்களுக்கு எல்லா உரிமை உண்டு என்று முத்து சொல்லுகின்றார். 

ஆனால் ரோகிணி பேசாமல் தானே இருக்கின்றார் என்று  மனோஜ் சொல்ல,  உன்ன தூண்டி விட்டு  அவர் பேசாமல் இருக்கிறார் என்று  முத்து போட்டு உடைக்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட். 

Advertisement

Advertisement