• May 03 2024

மீராவுக்கு இந்த உணவு தான் ரொம்ப பிடிக்கும், என் கிட்ட ஆசிர்வாதம் எல்லாம் வாங்கிச்சு- கவலை தெரிவித்த வீட்டு பணிப்பெண்

stella / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் ஆண்டனி தன் வாழ்க்கையின் மிகப்பெரும் துயரத்தை இன்று அடைந்துள்ளார். அவரின் மூத்த மகள் மீரா இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்தார்.அதை தொடர்ந்து ஒட்டு மொத்த திரையுலகமும் விஜய் ஆண்டனி வீட்டிற்கு வந்து அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 மீராவின் இறுதிச்சடங்கு இன்று மாலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் கல்லறையில் இடம் கிடைக்க தாமதம் ஆனதால் அவரது இறுதிச்சடங்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. அதன்படி நாளை காலை 8 மணி முதல் 11 மணிக்குள் நடக்கும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.


 மீரா குறித்து அவரது ஆசிரியர்கள், தோழிகள் பேசுகையில் மீரா ரொம்பவே நல்ல பெண். தைரியமான பெண். தனது தந்தையுடம் சுதந்திரமாக பேசக்கூடியவர். இருந்தாலும் அவர் ஏன் தற்கொலை செய்துகொண்டார் என்பது புரியவில்லை என கூறுகின்றனர்.இந்த நிலையில் விஜய் ஆண்டனி வீட்டு பணி பெண் சந்திரகாந்தி மீரா பற்றி தற்பொழுது பேசியுள்ளார்.

அவர் கூறுகையில் "விஜய் ஆண்டனியின் வீட்டில் மூன்று மாதங்களாக சமைத்தேன். மீரா ரொம்பவே நல்ல பெண். தினமும் நான் தான் அவருக்கு சமைத்துக்கொடுப்பேன். அவர்களது குடும்பமே ரொம்ப பாசமாக இருப்பாங்க. எது வேண்டும் எது வேண்டாம்னு கேட்டாக்கூட இதோ வரேன் ஆன்ட்டி என்று சொல்லும். அந்த பொண்ணு என்னை டிஸ்டர்பே பண்னாது. 


அதுவே வந்து எடுத்துக்கும். டீயோ காபியோ வேண்டுமென்றால் மட்டும்தான் நம்மிடம் கேட்கும். மற்றபடி எது வேண்டுமானாலும் அதுவே எடுத்துக்கொள்ளும். அவ்வளவு அமைதியான பொண்ணு. வீட்டில் இருக்கா இல்லையா என்றுகூட தெரியாது. யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்காது. சாப்பாட்டில் இதுவரை எந்த குறையும் சொன்னதே இல்லை.

 மீராவுக்கு தயிர்னா ரொம்பவே இஷ்டம். தயிர் போட்டு வைத்தால் போதும் அந்த பொண்ணுக்கு. இந்த செய்தி கேட்டு எனக்கு நெஞ்சே வலிக்கிறது. சந்தர்ப்ப சூழ்நிலையால்தான் இங்கிருந்து போனேனே ஒழிய வேண்டுமென்றே போகவில்லை. எனது மகள் கர்ப்பம் ஆனதால்தான் போனேன். மீராவின் இந்த வருட பிறந்தநாளுக்கெல்லாம் நான் இங்குதான் இருந்தேன். என்னிடம் ஆசீர்வாதம் எல்லாம் வாங்கினார். அவரை கடைசியாக பார்த்துவிட வேண்டுமென்று பெரம்பூரிலிருந்து வந்திருக்கிறேன்" என்றார்.



Advertisement

Advertisement

Advertisement