• Jan 15 2025

சுதாவை வெளுத்து வாங்கிய மீனா.. விஜயாவை புத்திசாலித் தனமாக ஏமாற்றிய முத்து

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதன்படி அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

ஏற்கனவே விஜயா ஸ்ருதியின் அம்மாவை கூப்பிட்டு ஸ்ருதிக்கு மரியாதை தெரியாது. அவர் மீனாவின் பேச்சைக் கேட்டுக் கொண்டு நடப்பதாக விஜயாவும் ரோகிணியும் நன்றாக ஏற்றி விடுகின்றார்.

இதனால் தற்போது ஸ்ருதியின் அம்மா மீனாவை பார்த்து காசுக்காக எனது பொண்ணை வளைச்சு போடுறீங்களா? காசுக்காக தான் நீயும் உன் புருஷனும் இப்படி பண்ணுறீங்களா என சொல்ல, வாய மூடுங்க என் புருஷன பத்தி தப்பா பேசாதீங்க என மீனா பதிலடி கொடுக்கின்றார்.


இதைத்தொடர்ந்து முத்து மீனாவை அழைத்துக் கொண்டு நேராக ஸ்ருதியிடம் சென்று, உங்க அம்மா எதுக்கு மீனாவுக்கு பேசினாங்க? என்று கேட்க, உங்க அம்மா பேசின படியா தான் இவ்வளவு பிரச்சினை என்று ஸ்ருதியும் சொல்லுகின்றார். இதையெல்லாம் கேட்டு வெளியே இருந்த விஜயா சந்தோஷப்படுகிறார்.

இவ்வாறு ரவி, ஸ்ருதி, முத்து மற்றும் மீனா ஆகிய நான்கு பேரும் விஜயாவை ஏமாற்றுவதற்காக உள்ளே இருந்து சண்டை போடுவது போல் நடித்துக் கொண்டுள்ளார்கள். வெளியே வந்த முத்து அண்ணாமலையிடம் இது அம்மாவை ஏமாற்றுவதற்காக செய்த டிராமா என்று சொல்ல, ஏதோ புத்திசாலித்தனமா பண்ணுறோம் என்று பிரச்சினையில் மாட்டிக்கொள்ள வேண்டாம் என முத்துவுக்கு அட்வைஸ் கொடுத்து செல்லுகின்றார் அண்ணாமலை. 

Advertisement

Advertisement