• May 19 2024

அட்ராசக்க.... முதல் நாளிலேயே வசூலில் அள்ளிக் குவித்த மாவீரன் திரைப்படம்- இத்தனை கோடி வசூலா?

stella / 10 months ago

Advertisement

Listen News!

மண்டேலா பட இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் ஃபேண்டஸி ஆக்‌ஷன் படமாக உருவாகி நேற்றைய தினம் வெளியாகிய திரைப்படம் தான் மண்டேலா.குடிசை மாற்று வாரியம் சார்பாக மக்களுக்கு கட்டிக் கொடுக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளின் தரம் அமைச்சர்களின் ஊழல் காரணமாக எந்தளவுக்கு மோசமாக உள்ளது என்பதை அழுத்தமாக இத்திரைப்படம் சொல்லியுள்ளது.

இதனால் இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. விமர்சன ரீதியாகவும் படத்தின் முதல் பாதிக்கு சூப்பரான விமர்சனங்களும் இரண்டாம் பாதி டீசன்ட் என்கிற விமர்சனங்களும் குவிந்துள்ள நிலையில், இந்த வாரம் தியேட்டருக்கு சிவகார்த்திகேயன், யோகி பாபுவின் காமெடி ரகளையை பார்த்து வயிறு குலுங்க சிரிக்க ரசிகர்கள் டிக்கெட்டுகளை புக் செய்து தியேட்டருக்கு படையெடுத்து வருகின்றனர்.


மாவீரன் படத்தின் பட்ஜெட் 35 கோடி என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்த படத்தின் முதல் நாள் வசூல் மட்டும் தமிழ்நாட்டில் 7.6 கோடி ரூபாய் என்றும் இந்தியளவில் 8.5 கோடி என்றும் உலகளவில் 10 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சாந்தி டாக்கீஸ் இந்த படத்திற்கு அதிகாரப்பூர்வ பாக்ஸ் ஆபிஸை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 இந்த ஆண்டு வெளியான படங்களில் டாப் 5 முதல் நாள் ஓபனிங் கொடுத்த படங்களில் மாவீரன் படமும் இடம்பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை தமிழ்நாட்டிலேயே மாவீரன் படம் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement