• Apr 30 2026

நான் சினிமாவுக்கு வர அவர் தான் காரணம்.! - தளபதி விஜய் பற்றி மாரி செல்வராஜ் சொன்ன சீக்ரெட்

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா மற்றும் அரசியல் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ள கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக நடிகர் விஜய் குறித்து அவர் கூறிய கருத்துகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய மாரி செல்வராஜ், “விஜய் சாரின் சினிமா மீது பிரியம் உண்டு. நான் சினிமா நோக்கி நகர அவரும் ஒரு காரணம். ஒரு ரசிகனா விஜயை எனக்கு பிடிக்கும். அவரின் அரசியல் நிலைப்பாடு முழுமையாக வெளிப்படும் போது புரிந்து கொள்ள முடியும். 


யார் வேணும்னாலும் அரசியலுக்கு வந்து நல்லது பண்ணலாம். அதை நாம் வரவேற்கத் தான் செய்யணும். அதற்கு வாழ்த்துக்கள் சொல்லலாம்.” எனத் தெரிவித்துள்ளார்.

இவர் கூறிய இந்த வரிகள், விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. ஒரு இயக்குநராக தன்னை ஊக்குவித்தவர்களில் விஜய்யும் ஒருவர் என அவர் வெளிப்படையாக கூறியிருப்பது இதன் மூலம் அறியமுடிகிறது. 

இந்த கருத்து தற்போது அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக, நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து பல்வேறு தரப்புகளில் விவாதங்கள் நடைபெற்று வரும் சூழலில், மாரி செல்வராஜ் அளித்த இந்த கருத்து சமநிலையான அணுகுமுறையாக பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement