• Apr 30 2026

அரசியலை விட சினிமாவே மேல் என முடிவெடுத்தாரா ராதிகா? வெளியான அதகள அப்டேட்.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

“தாய் கிழவி” திரைப்படத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று நடிகை ராதிகா சரத்குமார் தெளிவுபடுத்தியுள்ளார்.


பிப்ரவரி 27ஆம் தேதி வெளியான “தாய் கிழவி” படத்தை மதுரையில் உள்ள ஒரு திரையரங்கில் படக்குழுவினருடன் மற்றும் ரசிகர்களுடன் இணைந்து கண்டுகளித்த பின்னர் ராதிகா ஊடகங்களை சந்தித்தார். அப்போது அரசியல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “தொழிலில் முதலில் கவனம் செலுத்திவிட்டு பின்னர், அரசியலை பார்ப்போம்” என கூறியுள்ளார்.

ராதிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள “தாய் கிழவி” திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மதுரையில் திரையரங்கிற்கு வந்த அவர், ரசிகர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு அவர்களுடன் படம் பார்த்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement