கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘மரகத நாணயம்’ திரைப்படம் பேண்டஸி–காமெடி கதைக்களத்தில் உருவாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில், ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில் வெளியான இந்த படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என இயக்குநர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், நீண்ட காலமாக எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக, ‘மரகத நாணயம் 2’ படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்த பூஜையில் நடிகர் கார்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.

இரண்டாம் பாகத்திலும் நடிகர் ஆதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் நிக்கி கல்ராணி, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் இணைந்துள்ளனர். மேலும், அனுபவமிக்க நடிகர் சத்யராஜ் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் . இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார்.
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவாகும் இந்த இரண்டாம் பாகம், மேலும் பிரம்மாண்டமாகவும் விறுவிறுப்பான கதைக்களத்துடனும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ‘மரகத நாணயம் 2’ மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
Listen News!