தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக கதாநாயகனாக பயணித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், வயதை கடந்தும் இன்றும் இளமையான தோற்றத்துடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவருக்கென உருவான மிகப்பெரிய ரசிகர் கூட்டம், ஒவ்வொரு படத்தையும் திருவிழாவாக கொண்டாடி வருகிறது.
சமீப காலத்தில் ரஜினிகாந்த் நடித்த படங்களில் ‘ஜெயிலர்’ திரைப்படம் மிக முக்கியமான இடத்தை பிடித்தது. இந்த படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமாருக்கும் இது ஒரு டர்னிங் பாயிண்ட் ஆக அமைந்தது.
அதற்கு முன்பு ரஜினியின் அண்ணாத்த, தர்பார் ஆகிய படங்களும், நெல்சன் இயக்கிய பீஸ்ட்’படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் ரஜினியின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்து குறையும் என்றும், நெல்சனின் கேரியர் முடிவுக்கு வரும் என்றும் பல விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில், 'ஜெயிலர்' படத்தில் நெல்சனுடன் ரஜினிகாந்த் இணைந்தது குறித்து, அவருக்கு நெருக்கமான ஒருவர் அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.
அதில் அவர் கூறுகையில் , அந்த நேரத்தில் நெல்சன் வேண்டாம் என்று பலர் ரஜினி சாரிடம் சொன்னார்கள். ஆனால் அவர் யாருடைய பேச்சையும் கேட்கவில்லை. நெல்சன் இளம் இயக்குனர் என்பதால், இப்போது வாய்ப்பு தரவில்லை என்றால் அவரது கேரியர் திசை மாறிவிடும் என நினைத்து, முழு நம்பிக்கையுடன் ஜெயிலர் படத்தை ஒப்புக்கொண்டார்.
அவரோட அந்த நம்பிக்கை வீணாகப் போகவில்லை. ‘ஜெயிலர்’ படம் உலகளவில் சுமார் 700 கோடி ரூபாய் வரை வசூலித்து, சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. தற்போது அதன் இரண்டாம் பாகமும் உருவாக்கி வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.
Listen News!