• Apr 28 2024

'லியோ' ஆடியோ லான்ச் சந்திராயனில் நடக்கும்... அலப்பறையைக் கிளப்பிய மன்சூர் அலிகான்... விழுந்து விழுந்து சிரிக்கும் ரசிகர்கள்..!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் லியோ. இந்தப் படம் அக்டோபர் மாதம் 19-ஆம்  தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்ட நிலையில் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நீண்ட இடைவெளியின் பின்னர் த்ரிஷா நடித்துள்ளார். இவருடன் முக்கிய கதாப்பாத்திரத்தில்  மன்சூர் அலி கான், கௌதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலரும் நடித்து இருக்கின்றனர். இப்படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


இந்நிலையில் நடிகர் மன்சூர் அலி கான் சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டபோது அவரிடம் "லியோ ஆடியோ லான்ச் மதுரையில் நடக்குமா..? கோயம்புத்தூரில் நடக்குமா" என ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு மன்சூர் அலிகான் பதிலளிக்கையில் "சந்திராயனில் நடக்கும்" எனக் கூறியுள்ளார். இதனைக் கேட்ட ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement