தமிழகத்தில் தேர்தல் வாக்குப்பதிவுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வேலூர் மக்களவைத் தொகுதியில் சுயட்சியாக போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் இருந்து நேராக வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் மன்சூர் அலிகான். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
வாணியம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்த நிலையிலேயே அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து குடியாத்தம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவருக்கு முதல் உதவி வழங்கப்பட்டு, அதன் பிறகு மேலதிக சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து வரப்பட்டு உள்ளார்.
இவ்வாறு சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவருக்கு, கல்லீரல் மற்றும் மூச்சுத் திணறல் பிரச்சனைகள் இருப்பதாகவும் அதற்காக மருத்துவர்கள் சிகிச்சை வழங்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.
எனினும் தனது உடல் நிலையை கவனத்தில் கொல்லாமல், மருத்துவர்கள் வழங்கிய ஆலோசனைகளை மீறி தான் போட்டியிட்ட வேலூர் தொகுதிக்கு செல்வதற்காக மருத்துவமனையில் இருந்த மன்சூர் அலிகான் நேற்றைய தினம் ஸ்சார்ஜ் ஆகியுள்ளார்.
இந்த நிலையில், தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன நடிகர் மன்சூர் அலிகான், தான் போட்டியிடும் வேலூர் தொகுதிக்கு நேரடியாக சென்று அங்கு வாக்குகள் பதிவாகும் இடங்களை பார்வையிட்டுள்ளார்.
அத்துடன், அங்கு சில இடங்களில் சின்னங்கள் தெரியாதவாறு, வாக்குகள் பதிவு செய்யும் இயந்திரங்கள் இருட்டில் உள்ளதை கண்டித்து, வேறு இடங்களில் வைக்க சொல்லியுள்ளார். தற்போது குறித்த வீடியோக்கள் வைரலாகி உள்ளன.
Listen News!