• Sep 08 2026

திருட்டு கல்யாணத்துக்கு தயாரான மனோஜ்.. ஒன்றாக குவிந்த குடும்பம்.! புதிய திருப்பம்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்ததாக என்ன நடக்கப் போகிறது என்பது குறித்த புதிய ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த ப்ரோமோவின் படி, வீட்டிலிருந்து மாப்பிள்ளையாக புறப்படும் மனோஜ், தனது திருமணம் குறித்து விஜயாவிடமும் அண்ணாமலையிடமும் சொல்ல முடியாமல் மறைத்து வெளியே செல்கிறார்.

அதே நேரத்தில், கனகாவின் வீட்டில் திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பூமாலை அலங்காரம் மற்றும் கேட்டரிங் வேலைகளுக்காக ஸ்ருதி, ரவி, முத்து மற்றும் மீனா உள்ளிட்டோர் அங்கு வருகின்றனர்.


மேலும், ரோகிணியும் மணப்பெண்ணை அலங்கரிக்க வருகை தருகிறார். ஆனால் அனைவரும் ஒருவரை ஒருவர் கவனிக்காமல் திருமண ஏற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில், மனோஜ் மணமகனாக வரும்போது தனது குடும்பத்தினரை அங்கு பார்த்து அதிர்ச்சியடைகிறார். இதனால் இந்த திருமணம் நடைபெறுமா? அல்லது மனோஜ் யாருக்கும் தெரியாமல் கனகாவுக்கு தாலி கட்டுவாரா? என்ற கேள்வியுடன் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்த புதிய திருப்பம் தற்போது ரசிகர்களிடையே பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement