இந்திய திரையுலகின் முக்கிய இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் கடந்த மாதம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவிற்கு திரைத்துறையினர் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
ஆனால், அவர் இயக்கிய “முந்தானை முடிச்சு” திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஊர்வசி இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளவில்லை என்பதால் சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் இதுகுறித்து விளக்கம் அளித்த ஊர்வசி, இறுதிச்சடங்கில் பங்கேற்காததற்கான காரணத்தை கூறியுள்ளார்.
அவர் பேசுகையில், அந்த நேரத்தில் மீடியா முன்பு மிகுந்த உணர்ச்சி வெளிப்பாட்டை காட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதால், மனஅழுத்தம் காரணமாக தன்னால் நேரில் செல்ல முடியவில்லை என தெரிவித்தார்.

அதன்படி, நான் பூர்ணிமாவிடம் பேசினேன். தாங்கிக்கொள்ளும் சக்தி எனக்கு இல்லை. மீடியா முன்பு ஓவர் எமோஷனல் ஆக அவசியம் இல்லை. அதை எல்லாம் உண்மை என சிலர் சொல்வார்கள். பொய் என சிலர் சொல்வார்கள். இந்த விமர்சனத்துக்கு எல்லாம் அங்கே இடம் கிடையாது. நான் எப்போதுமே சிரித்து பேச வேண்டும், கலாய்க்க வேண்டும் என்றுதான் அவர் விரும்புவார். அவருக்கு பிடித்த மாணவி நான். நான் அழுவது அவருக்கு பிடிக்காது. அவர் அப்படி படுத்திருப்பதை பார்ப்பதற்கான சக்தி எனக்கு கிடையாது என்றார்.
மேலும், “அவரது குடும்பத்திற்கும், அவரின் ஆத்மாவுக்கும் என் அன்பும் மரியாதையும் தெரியும். அதுவே எனக்கு போதும்” என்றும், அவர் தன்னை அழுது காண விரும்பமாட்டார் என்றும் ஊர்வசி கூறியுள்ளார்.
பாக்யராஜின் மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், ஊர்வசியின் இந்த விளக்கம் தற்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
Listen News!