• Jun 26 2026

மனோஜ்க்கு அடித்த ஜாக்பாட்... கோடி சொத்துடன் வந்த திருமண ஆஃபர்! அண்ணாமலையின் அதிரடி முடிவு!

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மனோஜின் ஷோரூமுக்கு வந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய், அவரிடம் தனது மகளை திருமணம் செய்து கொள்ளுமாறு எதிர்பாராத கோரிக்கை விடுக்கிறார்.

மேலும், என்னுடைய பொண்ணை பல மருத்துவர்களிடம் காட்டியாச்சு. அவளுக்கு திருமணம் செய்து வைத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று சொன்னார்கள். ஆனால், அவளை திருமணம் செய்ய யாரும் முன்வரவில்லை. நீங்கள் என் பொண்ணை திருமணம் செய்தால், என்னிடம் இருக்கும் கோடிக்கணக்கான சொத்துகளை உங்களுடைய காலடியில் கொட்டுவேன் என்று தெரிவிக்கிறார்.

மற்றொரு பக்கம், விஜயா வீட்டிற்கு சிந்தாமணியும் அவரது கணவரும் அடியாட்களுடன் வந்து மிரட்டுகின்றனர். என்னுடைய மகளை எங்கே கடத்தி வைத்திருக்கிறீர்கள்? என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபடுவதோடு, அடிதடியிலும் இறங்குகின்றனர்.


ஆனால், மீனாவும் அண்ணாமலையும், ரேகா உங்களிடம் வராததற்கு காரணம் நீங்கள்தான். நீங்கள் ஒருபோதும் திருந்த மாட்டீர்கள் என்று பதிலடி கொடுக்கின்றனர். இதனால் ஏற்பட்ட பரபரப்பை அக்கம் பக்கத்தினர் வந்து சமாதானப்படுத்துகின்றனர்.

இதனால், இங்கே பேசி எதுவும் நடக்கப்போவதில்லை. இவர்களை வேறு விதமாக டீல் பண்ணுவோம் என்று கூறிவிட்டு சிந்தாமணி அங்கிருந்து கிளம்புகிறார்.

இறுதியாக, அண்ணாமலை, சிந்தாமணி திருந்த மாட்டார். அதனால் ரேகாவின் திருமண ஏற்பாடுகளை விரைவாக செய்து முடி என்று முத்துவிடம் கூறுகிறார். இதனுடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

Advertisement

Advertisement