• Jul 20 2026

நம்ம முதலமைச்சர் எதுசெய்தாலும் கியூட் தான்! போதை ஒழிப்பு நிகழ்ச்சியில் விஜய் செய்த சம்பவம்

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு நாளை முன்னிட்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சிறப்பு மாரத்தான் ஓட்டம் இன்று (ஜூன் 26) சென்னை காமராஜர் சாலையில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தமிழ்நாடு முதல்வர் ச. ஜோசப் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


மாரத்தான் தொடங்குவதற்கு முன்பு, நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள், இளைஞர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்து, போதை இல்லாத சமூகத்தை உருவாக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இளைஞர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டின் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்ததுடன் நிற்காமல், முதல்வர் விஜய்யும் பொதுமக்களோடு இணைந்து ஓட்டத்தில் பங்கேற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அவருடன் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, என். ஆனந்த், மரிய வில்சன், வெங்கட்ரமணன் ஆகியோரும் கலந்து கொண்டு ஓடினர். மேலும், மாநில டிஜிபி, சென்னை காவல் ஆணையர், தலைமைச் செயலர் உள்ளிட்ட உயரதிகாரிகளும் இந்த விழிப்புணர்வு நிகழ்வில் பங்கேற்றனர்.


போதைப்பொருள் இல்லாத ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற அரசின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த மாரத்தான், இளைஞர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை வலுப்படுத்தும் முக்கிய நிகழ்வாக அமைந்தது.


Advertisement

Advertisement