• Oct 04 2024

ரோகிணியின் ஆட்டத்துக்கு செக் வைத்த மனோஜ்.. விஜயா கொடுத்த வார்னிங்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோட்டில், மனோஜின் குழந்தை தான் தனக்கு முதலாவதாக உருவானது. ஆனாலும் அந்த கரு கலைந்தது என்று சொல்லி அழுது விஜயாவை நம்ப வைத்ததோடு மட்டுமில்லாமல் விஜயாவையும் அழ வைத்து விடுகின்றார் ரோகிணி.

இதை நம்பிய விஜயாவும் தன்னிடம் சொல்லி இருக்கலாம் தானே நான் உன்னை நன்றாக பார்த்துக் கொண்டு இருப்பேன். இப்படி ஒரு விடயம் நடந்திருக்காது என்று சொல்ல, அந்த நேரத்தில் இப்படி நடந்து விட்டது இது தெரிந்திருந்தால் நீங்கள் ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பீங்க என்று சொல்லி நாடகம் ஆடுகின்றார்.

அதன் பின்பு இந்த விஷயம் எப்படி தெரியும் என்று கேட்க, அண்ணாமலை முத்துவை சொல்லுகின்றார். முத்து ரவியை சொல்கின்றார். ரவி ஸ்ருதியை சொல்ல இறுதியில் ஸ்ருதி மீனா  சொன்னதாக சொல்லுகின்றார். இதனால் விஜயா மீனாவை கண்ட படி திட்டுகின்றார்.

ரோகினியும் எங்க ப்விசயத்துல நீங்க ஏன் தலையிடுறீங்க? இது அடுத்தவங்க பெட்ரூம்ம எட்டி பாக்குறதுக்கு சமம் என்று சொல்ல, மீனா அழுகின்றார். விஜயாவும் இதுதான் உனக்கு கடைசி வார்னிங் என சொல்லி செல்கிறார்.


அதன் பின்பு முத்து மீனாவை சமாதானப்படுத்தி விட்டு ரோகிணி  ஒரு பிராடு. நீ அழாத என சொல்ல, இல்ல ரோகிணி வாழ்க்கையில ஏதோ ஒரு மர்மம் இருக்கு என்று மீனா சொல்ல, அதை வெளியே இருந்து ரோகிணி கேட்டு விடுகிறார். இதனால் விஜயாவிடம் சென்று தான் தனி குடுத்தனம் போக போவதாக சொல்ல, இந்த வீட்டில் மீனா தானே உனக்கு பிரச்சினை அவளுக்கு கூடிய சீக்கிரம் முடிவு கட்டுகிறேன் என விஜயா சொல்லுகின்றார்.

அதன் பின்பு  மனோஜ் தான் இப்போது தான் சந்தோஷமாக இருப்பதாக சொல்ல, ரோகினி ஏன் என்று கேட்கின்றார். அதற்கு நான் தான் அப்பா ஆகிட்டேன்ல. இனி டாக்டர் செக்கப் தேவை இல்லை. இனி உனக்கு நிச்சயம் குழந்தை பிறக்கும் என சொன்னதோடு பிறக்க உள்ள குழந்தைக்காக மனோஜ் கதைப்பதை பார்த்து ரோகினி அவரை கட்டிப்பிடித்து அழுகின்றார். எல்லாம் உன்னோடு வாழ வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி பொய் சொல்கிறேன் என மனதுக்குள் சொல்லிக் கொள்ளுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement